பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ெசரிதும் உருவாயின என்று சொல்லவேண்டும். ஷெல்லி

பிறந்த ஆண்?டா3 1792-ம் ஆண்டிலேயே இவர் பெண் கள் உரிமைகளுக்கான நியாய சாசனம் {A Vindication of the Rights of 1Women) என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூரல் இன்றும்கூட, இங்கிலாந்தில் மலிவுப் பதிப்ட்டமாக வெளிவந்து விற்பனையாகிறது என்பதை நினைத்துப் பார்த் தால், அதன் வலுவையும் கருத்தாழத்தையும் நாம் ஓரளவு ஊகித்துக்கொள்ளலாம். அந்நூலில் அவர் தமது புரட்சிகர ADான பெண் விடுதலைக் கருத்துக்களையெல்லாம் பொழிந்து வைத்தார். அந்த நூலில் அவர் பின்வருமாறு எழுதினார்; • : பெண்களுக்குள்ள உரிமைகளுக்காகப் போராடும் போது, எனது பிரதானமான விவாதக் கூற்று இந்தச் சாதாரணக் கொள்கையின் மீதுதா ன்" எழுப்பப்பட்டுள்ளது; அதாவது ஆண்மகனின் கூட்டாளியாக மாறும் வண்ணம், அவள் கல்வியின் மூலம் தயார் செய்யப்படாவிட்டால், அவள் அறி வின் முன்னேற்றத்தையே தடை செய்து விடுவாள்; ஏனெனில் உண்மை என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் பொதுவான நடைமுறையின் மீது அதற்குள்ள, செல்வாக்கின் விஷயத்தில், அது விரும்பிய பலனைத் தர இயலாததாகிவிடும். மேலும், தான் ஏன் ஒழுக்க முடையவளாக இருக்கவேண்டும் என்பதை அவள் தெரிந்து கொள்ளாவிட்டால், அவள் தனது கடமையை உணர்ந்து, அது எவ்வாறு தனது உண்மையான நலத்தோடு சம்பந்தப் பட்டுள்ளது என்பதைக் கண்டுணரும் வரையிலும், சுதந்திர மானது அவளது பகுத்தறிவைப் பலப்படுத்தாது போய்விட் டால், பெண்களின் ஒத்துழைப்பைத்தான் எப்படி எதிர் பார்க்க முடியும்? இவ்வாறு பெண்களின் அறிவை வளர்ப் பதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். ஏனெனில் பெண்களின் அறிவை ஒடுக்குவதன் மூலமே ஆண்கள் அவர் களை அடக்கியாள முனைகிறார்கள் என்றும் அவர் கருதினார். - “பெண்களின் மனத்தை விசாலப்படுத்துவதன் மூலம் அதனைப் பலம் பெறச் செய்யுங்கள், அதன் மூலம் குருட்டுத்தனமான கீழ்ப்பட்டி தலுக்கு ஒரு முடிவு ஏற்பட்டு விடும். ஆனால் குருட்டுத் தனமான கீழ்ப்படிதலையே அதிகாரம் என்றென்றும் நாடிச் 130