பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரமாக விளங்குவ த கதா நாயகனான' லயா ன் அல்ல; கதா நாயகியான சித்னாதான். இவளது பாத்திரத்தைக் குறித்து கார்லோஸ் (பேக்கர் என்ற விமர்சகர் பின்வருமாறு எழுது திரர்: 1 ஒற்றுமைக்குத் துணைபுரியும் மத்திய பாத்திரம் கதிர நாயகி சித்னா தான். அவள் கதையில் பிரசன்னமாக இல்லாத வேளையிலும்கூட, ஓர் உறுதிவாய்ந்த உந்து சக்தியாகவும், புரட்சியின் ஒருவிதமான கரு வீடாகவும் அவள் தான் கவிதை முழுவதிலும் பயன்படுகிறாள் ; ஷெல்லியின் புரட்சிகரமான கண்ணுக்கு அவளே கண்மணியெனத் தெள்ளத் தெளிவாகத் தென்படுகிறான் . அவளோடு ஒப்பிடும்போது லயான் வெறு மனே ஒரு நிழலாகவும், செய்தி கொணர்பவனாகவும், கண் டதை உரைக்கும் நிருபனாகவும் செயல்படுவதைக் காட்டி லும் செயல்படுத்தப் படுபவனாகவும்தான் இருக்கிறான், {Shelley's Major Poetry--Carlos Baker). எட்ம ண்ட் பிளண்டன் என்னும் விமர்சகரோ, மற்றொரு சாதனை இத்னா என்ற பாத்திரம்; இவள் நமது (ஆங்கிலக்) கவிதை கண்ட முதல் * புதுமைப் பெண்' எனச் சுட்டிக் காட்டப் பெற்றுள் ளாள். உலகைச் சீர்திருத்துவதில், லயானைக் காட்டிலும் அறிவாற்றல் மிக்கவளாகவும், உணர்ச்சியால் உந்தப்பட்டவ ளாகவும் அவள் தான் விளங்குகிறாள், பெண்மைக்குணம் படைத்தவளாகவும், பெண்ணின் காதலிலும் யாரும் மிஞ்ச இயலாதவளாகவும், அழகாகவும் அமைந்த அவள்தான் அரசியல் தர்மத்துக்கும் தலைவியாக விளங்குகிறாள்” என்று கூறுகிறார் (Shelley-B, Bizarden). ஆங்கில இலக்கியம் கண்ட இந்த முதல் புதுமைப் பெண்ணை, ஆங்கில உலகம் கண்ட முதல் புதுமைப் பெண்ணான மேரி உல்ஸ்டோன்கிராட்டை மனத் தில் கொண்டே ஷெல்லி உருவாக்கினான் என்றே சொல்ல லாம், சித்ரா என்ற இந்தப் புதுமைப் பெண் எப்படிப் பட்டவள்? கதையில் வரும் சொர்ணபுரிக்குள் சென்று அங்குள்ள பெண்களின் புனர் வாழ்வுக்காக அவள் பேசிய காலத்தில் அங்குள்ளவர்களில் சிலர் அவளை ஒரு தேவ கன்னிகையாகவே மதிக்கிறார்கள். இதனை அவளே பின்வரு மாறு சொல்கிறாள்: *'பெண்களை அடிமைத் தளைகளிலிருந் தும் அழிவிலிருந்தும் காப்பாற்றுவதற்காக அனுப்பி வைக்