பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொனிகளில் அவள் தம் து அந்தரங்கமான ஆத்.! 27வெப் பொழிந்தாள்" (சுருக்கம் 5, பாட்டு $2): (She, like a spirit through the darkness shining in tones whose sweetness silence did prolong As if to lingering winds tiney didi belong

  • Poured forth her inmost s?!!...}

இவ்வாறு கேட்டாரை மந்திரம் போல் பிரித்து அவர் களைத் தன்வசமாக்கும் மொழியும் இனிமையும் படைத்த அந்தப் புதுமைப் பெண்ணின் மூலம் ஷெல்லி பெண் விடுதலை பற்றிய தனது கருத்துக்களையெல்லாம் பரக்க வெளியிடுகிறான். ஷெல்லி தான் இயற்றிய முதல் நெடுங்கவிதையான 'ராணி உமாபில் காதலும்கூட விற்பனைப் பொருளாகிவிட்ட புன்மை யைக் குறிப்பிடும் பகுதியை முன்னர் பார்த்தோம். எனவே தான் காணும் பொற்கால சமுதாயத்தில், *'பெண்ணும் ஆணும் நம்பிக்கையோடும், காதலோடும், சமத்துவமாகவும் சுதந்திரமாகவும் புனிதமாகவும் தருமத்தின்' மலைப்பாதை களில் இணைந்து நடை போடுவார்கள்” என்று அவன் கூறு கிறான் 'ராணி மாப்' படலம் 9, வரிகள் 89-90}; Woman and man, in confidence and love, Equal and free and pure together trod The movintain-paths of virt2e...) இவ்வாறு ஆண் மெண் சமத்துவம் பற்றிய அவனது கருத்து ' ரணி மரபிலேயே இடம் பெற்றுவிட்டபோதிலும், அது விகாசமும் விளக்கமும் பெற்று, முதன் முதலில் சிறப்புறத் தெ! டக்குவது 'இஸ்லாமின் புரட்சியில்தான். இந்நாளில் அதன் கதாநாயகியான' சித்னா பெண்ணடிமைத்தனத்தைப் பற்றி, கதா நாயகனான லானோடு சேர்ந்து கவலை தெரிவித்தது குறித்து லபரன் பின்வருமாறு குறிப்பிடுகிறான்: இவ்வாறாக 12ளித குலத்தின் செம்பாதிப் பகுதி காமவேட்கைக்கும் வெறுப்புக்கும் பலியாகி , அடிமைகளின் அடிமைகளாகச் சிறைபட்டுக் கிடக்கும் புல்லடிமை நிலையைக் கண்டு, சித்னாவும் என்னோடு வருந்தினாள் (சருக்கம் 2, பாடல் 38): 135