பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யத்தில் காதலுக்கு உண்மையான மதிப்பும் ஸ்தானமும் இல்லை என் உடதை உணர்ந்தான்; இதனால் காதலும், காதலுக் குரிய பெண்' சூலமும் விலைப் பொருளாவதையும், அதனால் விபசாரம் மவிவதையும் அவன் கண்டான். பெண்ணடி, மைத்தனத்தின் கோரத்தை அவன் தனது பாஞ்சாலி சபதத் தில் ஆணித்தரமாக எடுத்துரைக்கிருன். அன்றிருந்த அநியாய மான சட்டத்தை வீட்டுமனின் கோயிலாக வெளியிடுகிறான்: இப்பொழுதை நூல்களிலோ எண்ணுங்கால், ஆடாபருக்கு ஒப்பில்லை மாதர், ஒருவன் தன் தாரத்தை விற்றிடலாம்; தாகனமென வேற்றுவர்க்குத் தந்திடலாம். முற்றும் விலங்கு முறைமையன்றி வேறில்லை , இவ்வாறு வீட்டுமன் வாயிலாகக் கூற வைத்து விட்டு, அதற்கு எதிரடியாக இந்தச் சட்டத்தைச் சாடும் விதத்தில், பேரசு செய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள்! என்று பாஞ்சாலி வாயிலாகப் பதிலும் அளிக்கிறான். மேலும் பாஞ்சாலியை அடிமையாக்கிய செய்தியை, செருப்புக்குத் தோல் வேண்டியே-இங்குக் கொல்வரோ செல்வக் குழந்தையினை? விருப்பற்ற சூதினுக்கே-ஒத்த பந்தயம் மெய்த்தவப் பாஞ்சாலியோ? என்றும் கவிக் கூற்றாகச் சீறி மொழிகிறான். பாஞ்சாலி சபதத்தை அவன் படைத்த காரணமே பெண்ணடிமைத் தனத்தைப் போக்கவேண்டும் என்ற வேட்கை தான். பாரத காலத்தில் நிலவிய பெண்ணடிமைத்தனம் தான் வாழ்ந்து வந்த காலத்திலும் மறையாதிருப்பதைக் கண்ட பாரதி. அந்த அடிமைத்தனத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினான். என்பதை நாமறிவோம். அவன் தனது தமிழ் நாட்டின் விழிப்பு' (கட்டுரைகள் - மாதர்) என்ற கட்டுரையில் பின்வருமாறு எழுதுகிறான்: **எனவே இன்று தமிழ்நாட்டில் மாத்திரமேயல்லாது பூமண்டல முழுதிலும் பெண்ணைத் தாழ்வாகவும் ஆணை மேலாகவும் கருதி நடத்தும் முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் த வ று. அது. துன்பங் 139