பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வோம். எனவே குறைந்த பாசம் இருபதினாயிரம் ஸ்திரீகள் வ்யபசாரிகளாக இ ரு த் த ல் அவசியமாகிறது. அந்த இருபதினாயிரம் வ்யபசாரிகளில் நூறுபேர்தான் தள்ளப் படுகிறார்கள். மற்றவர்கள் புரு செனுடன் வாழ்கிறார்கள். ஆனால் அவளுடைய புருஷனுக்கு மாத்திரம் அவளவள் வ்யபசாரி என்பது நிச்சயமாகத் தெரியாது. தெரிந்தும் உ.பாதகமில்லை என்று சும்மா இருப்பாருமுளர், ' ' ' ஆகவே பெரும்பாலோர் வ்யடசாரிகளுடனேதான் வாழ்கிறார்கள். இதனிடையே பதிவ்ரத்யத்தைக் காப்பாற்றும் பொருட்டாக ஸ்திரீகளைப் புருஷர்கள் அடிப்பதும் திட்டுவதும் கொடுமை செய்வதும் எல்லை யி ன் றி நடைபெற்று வருகின்றன. சீச்சீ! மானங்கெட்ட தோல்வி ஆண்களுக்கு! அநியாயமும் கொடுமையும் செய்து பயனில்லை! மேற்கண்ட கூற்றில் பெண்ணடிமைத்தனத்தாலும், ஆண் பெண் சமத்துவமும் சம உரிமையும் இல்லாத நிலையா லும், வாழ்க்கையில் பரஸ்பரம் உண்மையான காதலுக்கு இடமில்லாமல், 'இச்சையைப் பூர்த்திசெய்யும் விபசாரம் தலை தூக்குகிறது என்ற கருத்து குடிகொண்டிருப்பது நமக்குப் புலப்படும், உரிமையற்ற மணவாழ்க்கையில் கா தலைக் காணாது, அதன் காரணமாகக் காதலை நாடித் தவிக்கும் பெண்களே . கற்பு நிலை தவறக் காண்கிறோம் என்றும் பாரதி கருதுகிறான். இந்தக் கருத்தை அவன் தனது கவிதையிலும் ஆணித்தரமாக வெளிப்படுத்துகின்றான்; ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால் அப்போது பெண்மையும் கற்பழிந்திடாதோ? நாணற்ற வார்த்தையன்றோ ? வீட்டைச் சுட்டால் நலமான கூரையும்தான் எரிந்திடாதோ? பேணுமொரு காதலினை வேண்டி யன்றோ பெண் மக்கள் கற்பு நிலை பிறழுகின்றார் ? காணுகின்ற காட்சிவெலாம் மறைத்து வைத்துக் கற்பு கற்பு என் றுலகோர் கதைக்கின்றாரே! (பாரதி அறுபத்தாறு-56) 141