பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் அறம் திறம்புவதில்லையாம் (புதுமைப் பெண் 4, 7) இவ்வாருக, பாரதியின் புதுமைப் பெண்ணும் சித்னா லைப் போலவே அறிவும் ஞானமும் வீரமும் மிகுந்த வீராங் கனையாகவும். அதே சமயம், காதல் ஒருவனைக் கைப் பிடித்தே அவன் காரியம் யாவினும் கை கொடுத்து மாதர் அ நங்கள் பழமையைக் காட்டி- இம் மாட்சி பெறச் செய்து . ., {பெண் விடுதலைக் கும்மி 3) வாழ்வோம் எனச் சொல்லும் காதலியாகவும் காட்சியளிக் கிருள். நாட்டின் விடுதலைக்குப் போராடும் சித்னாவைப் போலவே பாரதியின் புதுமைப் பெண்ணும், சிறுமை தீர நந்தாய்த் திருநாட்டைத் திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம் (பெண் விடுதலை) என்று சபதம் ஏற்கும் தேசபக்தையாகவும் தோற்றமளிக் கிறாள் . ஆண் பெண் சமத்துவத்தைப் பற்றியோ பாரதி மிகவும் அழுத்தமாகப் பாடுகிறான் : மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்; வை? வாழ்வு தன்னில் எந்த வகையினும் நமக்குளே : தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் : சரிநிகர் சமானமாக வாழ்வும் இந்த நாட்டிலே! - - (விடுதலை) . 148