பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் சமத்துவத்தை 'சரி, நிகர், சமானம்' என்ற மூன்று சொற்களால் முக்காலும் வற்புறுத்திப் பாடிவிடு கிறான், ஆண், பெண் சமத்துவத்தைப்பற்றி ஷெல்லி பாடிய அத்தனைக் கருத்துக்களையும் உள்ளடக்கிய கவிதை யாக இந்த ஒரு பாடல் அமைந்து விடுகிறது. விடுதலைக் காதல் &LANாரதிக்கும் ஷெல்லிக்கும் பெண் விடுதலையையும் சமத்துவத்தை யும் பற்றிய ஒத்த கருத்துக்கள் இருந்தன என் பது வெளிப்படை, மேலும் பின்னவனான் பாரதி முன்னல் னான ஷெல்லியின் கருத்துக்களைச் சுவீகரித்திருந்தான் என் பதையும் மேற்கூறிய உதாரணங்கள் மூலம் நாம் கண்டு தெளியலாம். அதே சமயம் பின்னவனாகப் பிறந்த காரணத் தால், நூற்றாண்டுக்கால அவகாசத்தில் பெண்விடுதலை சம் பந்தமாக எழுந்த கிளர்ச்சிகளையும், அதில் உலகம் கண்ட வெற்றிகளையும் சாதனைகளையும் காணும் வாய்ப்பு பாரதிக்கு இருந்தது. எனவே அவனது புதுமைப் பெண் ' ஷெல்லியின் புதுமைப் பெண்ணைக் காட்டிலும் திட்டவட்டமான லட்சி யங்களையும், நடைமுறை வாழ்க்கையில் அவற்றைக் கொண்டு செலுத்தும் முறைகளையும் நன்கறிந்தவளாக உருப் பெறுகிறாள். இதனை அவனது புதுமைப் பெண், பெண் விடுதலைக் கும்மி ஆகிய பாடல்களில் நாம் காணலாம். மேலும் அவன் தான் எழுதியுள்ள கட்டுரைப் படைப்புக் சளிலும் பெண் விடுதலை சம்பந்தமாக எழும் பிரச்சினைகளை யும், அவற்றுக்கான தீர்வு முறைகளையும் மிகவும் தீர்க்க மாக ஆராய்ந்து வெளியிட்டுள்ளான் என்பதையும் நாமறி வோம், பெண் விடுதலை சம்பந்தமாக ஷெல்லிக்கும் பாரதிக்கும் பெருத்த உடன்பாடு இருந்த போதிலும், ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் பாரதி ஷெல்லியிடமிருந்து மாறு படுவதுடன், ஷெல்லி ஆதரித்த அந்த விஷயத்தைக் கண்டிக்கவும் செய்கிறான், அது தான் விடுதலைக் காதல் (Free love) என்ற விஷயம், பரிபூரணத்துவத்தையும் சுதந்திரத்தையும் வற்புறுத்திய 147