பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"..... as it the splendour of the Sun, All shapes look glorious which thou gazest on! என்ற வரியைத்தான் பாரதி மேலே குறிப்பிட்டுள்ளான் என் பதையும், இதன் மூலம் பாரதி ஷெல்லியை உன் றிக் கற்றிருக்கிறான் என்பதையும் நாம் அவனது எழுத்தின் மூல மாகவே இங்கு ஊகிக்க முடிகிறது. இதனைப் போலவே கும்பகோணம் மகாமகத்தைப் பற்றி எழுதியுள்ள 4் மகா மகம்' என்ற கட்டுரையொன்றையும் அவன் பின்வருமாறு தொடங்கியுள்ளான் (பாரதி தமிழ்: 1 இந்திரனை தேவதேவன் என்ப. மற்ற மனிதருக்கு வானவர் எப்படியோ அப்படி வானவர்க்கவன் என்பது குறிப்பு. வடமொழியில் வால்மீகி, காளிதாசர்களையும், தமிழில் கம்பனையும், புகழேந்தியையும், இங்கிலீஷில் ஷெல்லி யையும் கவிகளின் கவி' என்று சிறப்பித்துச் சொல்கிறார்கள். அதாவது, மற்ற மனிதருக்குக் கவிகளால் எத்தனை புதிய சுவை கிடைக்கிறதோ, அத்தனை புதிய சுவை கவிஞருக்கு அவ் வால்மீகி முதலியவர்களிடம் கிடைக்கிறதென்பது குறிப்பு.” இந்தக் குறிப்பின் மூலம் பாரதி ஷெல்லியின் மீது எவ் வளவு உயர்ந்த அபிப்பிராயம் கொண்டிருந்தான் என்பதை நாம் நேர்முகமாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. மேலும், மேலே குறிப்பிட்டுள்ள இரு குறிப்புக்களும் முறையே செப்டம்பர் 14, 1919 அன்றும், பிப்ரவரி 24, 1921 அன்றும் பாரதியால் எழுதப்பட்டவை. இதன் மூலம் தனது இலக்கிய வாழ்வின் தொடக்கக் காலத்திலேயே ஷெல்லி யிடம் ஈடுபாடு கொண்ட பாரதி, தனது இறுதிக் காலம் வரையிலும் ஷெல்லியின் டசால் கொண்ட ஈடுபாட்டையும் மதிப்பையும் குறைத்துக்கொள்ளவில்லை, என்பதையும் நாம் ஊகிக்க முடிகிறது. ஷெல்லியைப்பற்றிப் பாரதியின் எழுத் துக்களில் . காணும் குறிப்புக்கள் இவ்வளவே எனினும்

  • கவிகளின் கவி' என்று பாரதி சிறப்பித்துக் கூறிய. ஷெல்லி,

பாரதி என்ற கவிக்கும் கவி யாக எப்படி விளங்கினான் என்பதை நாம் இருவரது படைப்புக்களிலிருந்தும் பரக்கத் தெரிந்து கொள்ளலாம். ,