பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மையே அருந்துவது வந்ததும், தனவா என்றும்-பார்க்க வேண்டும் . . . . ஆண்பெண் பாலர் கள் ஒருவருக்கொருவர் கொள்ளும் உறவுகள் சமுதாயப் பொருளாதாரத்துக்கும் உடல் தேவைக்கும் இடையே நிகழும் சக்திகளது விளையாட்டின் வெளியீடு மட்டும் அல்ல . . , தாகம் தணிக்கப்படவேண்டும் என்பது உண்மை தான், என்றாலும் ஒரு சகஜமான மனிதன் சகஜமான சந்தர்ப்பங்களில் ஒரு சாக்சடையின்மீது படுத்து , குட்டையிலுள்ள தண்ணீரை, அல்லது பல உதடுகள் பட்டு விளிம்பெல்லாம் சறை படிந்து விட்ட கோப்பையிலுள்ள தண்ணீரை அருந்துவானா? ஆயினும் சமுதாய அம்சம் எல்லாவற்றிலும் மிக முக்கியமானதாகும். தண்ணீரை அருந்துவது ஒரு தனிநபர் விவகாரம் என்பது உண்மையே. ஆயினும் காதலில் இரு உயிர்கள் சம்பந்தப் பட்டுள்ளன. மேலும் மூன்றாவதான புதிய உயிரும் தோன்று கிறது. இது தான் அதற்கு அதன் சமுதாய உள்ளடக்கத்தை வழங்குகிறது, இதுவே சமுதாயத்தின்பால் ஒரு கடமையை யும் தோற்றுவிக்கிறது(Lenin-The Mam: (Renuiniscences of Leptin)--Klara Zetkin). 'விடுதலைக்காதல்' என்ற போக்கின் தவற்றை லெனின் எவ்வளவு தெளிவாக அம்பலப்படுத்து கிறார் என்பதை நாம் இதில் காண்கிறோம், லெனினது இந்த வாசகங்களை நமது பாரதி படித்தறிந்து கொண்டிருந்தான் என்று சொல்வதற்கில்லை. என்றாலும் ஷெல் லியின் விடுதலைக் காதல் லட்சியத் தையும் அதன் விளைவாக உலகில் பிற்காலத்தில் விளைந்த அராஜகவாதப் போக்குகளையும் கண்டறிந்த பாரதி, அந்த லட்சியத்தையும், அதன் விளைவுகளையும் கண்டிக்கத் தவற வில்லை. காதலைக் கட்டுப்பாடின்றி அனுபவித்து இன்பம் துய்க்கவேண்டும் என்பதில் பாரதிக்கும் உடன்பாடு உண்டு என்றே சொல்லலாம். பாதி நடுக் கலவியி லே காதல் பேசிப் பகலெல்லாம் இரவெல்லாம் குருவி போல காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால் படைத் தலைவர் போர்த் தொழிலைக் கருதுவாரோ? (பாரதி அறுபத்தாறு-53) 154.