பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றே அவன் பாடுகிறான்; அதே போன்று பொருந்தாத் திருமணத்தையும் அவன் எதிர்க்கத்தான் செய்கிறான். இதற்கு அவனது சுய சரிதையில் உள்ள 'மணம்' என்ற பகுதியே நல்ல அத்தாட்சி (பாடல்கள் 33-38). எனினும் கட்டுப் பாடற்ற காதல் என்ற பெயரால், காமாந்த கார வாழ்க் கைக்கு வழிதிறந்து விடுவதையோ, திருமணம் என்ற திருவாசலையே அடைத்து மூடுவதையோ அவன் ஆதரிக்க வில்லை. எனவே அவன் தனது 'பாரதி அறுபத்தா' நில் விடுதலைக் காதலைப் பின்வருமாறு கண்டிக்கிறான்: காதலிலே விடுதலை என்றாங்கோர் கொள்கை கடுகி வளர்ந் திடுமென்பார் யூரோப்பாவில்; மாதரெலாம் தம்முடைய விருப்பின் வண்ணம் மனிதருடன் வாழ்ந்திட லரம் என்பார் அன்னோர்; . பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே பிரியம் வந்தால் கலந்து, அன்பு பிரிந்துவிட்டால், வேதளையொன் றில்லாதே பிரிந்து சென்று வேறொருவன் தனக்கூட வேண்டும் என்பார். வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர்! க விடுதலையாம் காதலெனில் பொய்மைக் காதல்! சோரரைப்போல் ஆண்மக்கள் புவியின் மீது சுவைமிக்க பெண்மை நலம் உண்ணுகின்றார். காரணம்தான் யாதெனி.லோ ஆண்க ளெல்லாம் " காவின்பம் விரும்புகின்றார்!. ....... " (பாடல்கள் 54, 55) " இதே விஷயத்தைக் குறித்து அவன் தனது --தேசியத். . கல்வி' (கட்டுரைகள்: சமூகம்) என்ற கட்டுரையில் பின்.. வருமாறு எழுதுகின்றான்: • *கா தல்-விடுதலை - வேண்டு மென்று கூறும் க்ஷி யொன்று ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் சிற்சில பண் டித பண்டிதைகளால் ஆதரிக்கப்படு கிறது. அது நியாயம் என்பதற்கு அந்தக் கக்ஷயார் காட்டும் ஆதாரங்கள் 'பல. முதலாவது பூமண்டல முழுதில் சென்ற கால நிகழ்கால அனு பவங்களைப் பிரமாணமாகக் காட்டுகிறார்கள். அதாவது 155