பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சியின் குழந்தைகள் முற்றி2றே இருந்த அற்புதமாக றே இருடி. வாழ் ஷெல்லியின் புரட்சிகரமான கருத்துக்களை ஒப்புக் கொள்ள மறுப்பவரும், முழு நூல் வடிவத்தில் அவன் முதன் முதலில் எழுதிய 'ராணி மாப்' (Queena Mah) என்ற" புரட்சிக் கவிதையை, * ஆனால் ராணி மாபைப் படித்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று ஒரே வரியில் ஒதுக்கித் தள்ளிவிடுபவருமான எட்மண்ட்ஸ் என்ற விமர் சகர், ஷெல்லியைப்பற்றிப் பின்வருமாறு எழுதுகிறார்: வேறு எந்தவொரு பெருங் கவிஞனைக் காட்டிலும், ஷெல்லி தன் கவிதையையே வாழ்ந்தான். அது மூர்க்கமாக, உணர்ச்சி வேகம் மிக்கதாக, எதிர்ப்புக் குணத்ததாக, முற்றிலும் காரிய சாத்தியமற்றதாக இருந்தால், அவனும் அவ்வாறே இருந்தான். அது தங்கு தடையற்ற ஆர்வ உணர்ச்சிகளும், அற்புதமான கனவுகளும் நிறைந்ததாக இருந்தால், அவனும் அவ்வாறே இருந்தான். மேலும், பிறிதோரிடத்தில் அவர், அவன் எப்படி வாழ்க்கையில் தனித்து நின்றானோ.. அதேபோல் ஆங்கிலக் கவிஞர்கள் மத்தி யிலும் தனித்தே நிற்கிறான். என்றும் கூறுகிறார் {Shelley) and His Poetry-E. W. Edmunds). . பாரதியின் புரட்சிக் கருத்துக்களை ஒப்புக்கொள்ள மறுப் பவர்களும்கூட, அவனைப்பற்றி மேற்கண்டவாறே கூற முடியும். இந்த இரு கவிஞர்களைப் பொறுத்தவரையில், வாழ்க்கை வேறு , கவிதை வேறு என வேறுபடுத்திப் பார்க்க ; இயலாது என்பது யாரும் மறுக்க இயலாத ஓர் உண்மை யாகும். ஏனெனில் ஏனைய கவிஞர்களைக் காட்டிலும், ' இவர்கள் விஷயத்தில் கவிதையும் வாழ்க்கையும் நெருங்கிய சம்பந்தமுடை யவை. மேலும் இருவரது வாழ்க்கையிலும் கூட நாம் பல்வேறு ஒற்றுமையம்சங்களைக் காண முடியும். அவற்றைக் காண்பதன் மூலம், இருவரையும் நாம் நன்கு புரிந்துகொள்ள இயலும். பாரதியின் வாழ்க்கையை நாம் அறிவோம்; ஆனால் ஷெல்லியன் வாழ்க்கையைத் தமிழ் வாசகர்கள் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். எனவே ஷெல்லி, பாரதி ஆகியோரின் வாழ்க்கையையும், அவற்றின்