பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவற்றோடு அவனது ஆரம்பகாலப் படைப்பனைத்திலும், - கொடுங்கோன்மைக்கான ம ாற் றா க பலாத்காரத்தை உபயோகிப்பதை மறுக்கும் ஒரு போக்கும், அவனது ஆரம்பம் மு த ல் இறுதிவரையிலுமுள்ள எல்லாப் படைப்புக்களிலும், தீய தன்மைகளின் மீது ஏற்படும் பகை மையானது தீய மனிதனின் மீது கொள்ளும் பகைமையாக அர்த்தப்படக்கூடாது என்ற ஒரு அழுத்தமான உறுதிப்பாடும் தென்ப டுகின்ற ன” (Three Studies in Shelley-Archi-bald T. Strong). - மேற்கண்ட கூற்றின் உண்மையை நாம் ஷெல் லியின் பல கவிதைகளிலிருந்தும் தெரிந்துகொள்ளலாம். அவற்றைச் சில உதாரணங்கள் மூலம் இங்குக் காண்போம். ஷெல்லி மனிதனிடமுள்ள தீமையைத்தான் வெறுத்தானே ஒழிய, மனிதனை வெறுக்கவில்லை என்ப) தத் தெரிந்துகொள்ள, ஷெல்லியின் வரலாற்றாசிரியரான ஆந்திரே மொராய் ஷெல்லி யின் வாழ்க் ைரயில் நடந்த சம்பவம் ஒன்றைத் தெரிவிக்கிறார். ஷெல்லி ஹாரியெட்டை மணந்து அவளோடு புதுமண வாழ்க்கை நடத்தி வந்த காலத்தில், ஷெல்லியின் அந்தரங்க நண்பனாகவிருந்த ஹாக், ஹாரியெட்டின்மீது தகாத காதல் கொண்டான். ஹா ரியெட் அவனது தவற்றை அவனுக்குச் சுட்டிக்காட்டியும்கூட, அவன் திருந்த முனையவில்லை. எனவே அவள் இவ்விஷயத்தை ஷெல்லியிடமே தெரிவித்தாள் .செய்தி யைக் கேட்டு ஷெல்லி திடுக்கிட்டான் .புது மண வாழ்க்கையில் புகுந்திருந்த ஷெல்விக்கு இந்தச் செய்தி எத்தகைய அதிர்ச்சி யைத் தந்திருக்குமென நாம் ஊகித்துக் கொள்ளலாம். என்றாலும் ஷெல்லி ஆத்திரப்படவில்லை. தன் நண்பனைச் சந்தித்து, அவனது தவற்றை அவனது மனத்தில் படுமாறு நிதானமாக எடுத்துரைத்தான். மேலும் நான் உன்மீது கோபம் கொள்ளவில்லை. நான் உன் குற்றத்தைத் தான் வெறுக் கிறேன், உன்னையல்ல. நீயே இந்தக் குற்றத்தை எண்ணிப் பின்னொரு நாள் என்னைப்போல் வெறுப்படை வாய். அந்த நாள் வரும்போது நீ அதற்குப் பொறுப்பாளியாக அதற்கு மேலும் இருக்கமாட்டாய், குற்றத்தைச் செய்த மனிதன் அதற்காக வருந்தும்போது, அவன் அதே மனிதனல்ல; அவன்