பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யுள்ளத்தில் எழுந்த ஓர் எண்ணம், காந்தியடிகளால் நடை முறை அனுபவத்துக்குக் கொண்டு வரப்பட்டது என்றே சொல்லலாம். எனவே தான் பிரெய்ல்ஸ்போர்டு என்ற விமர்சகர், “காந்தி செய்ததைப்போல் ஷெல்லி துன்பத்தின் சக்தியைப் போற்றிப் புகழ்கிறான் என்று *அராஜகத்தின் முகமூடி' கைப்பற்றி எழுதும்போது குறிப்பிடுகிறார் (Shelley, Goalviya and their Circle)-A. N. Brailsford). சொல்லப் போனால் வாழ்க்கைப்போரே இத்தகைய சாத்வீக முறையில்தான் நிகழவேண்டும் என்று ஷெல்லி கருதியதாகக் கூறலாம். இதனைப்பற்றி, அ வ ன து

  • கட்டறுந்த பிராமித்தியூஸ்" என்ற நாடகத்தின் கடைசி

வரிகளில் டெமோகார்கே!ன் (DemCgorgon) என்ற பாத் திரத்தின் வாய்மொழியாக வெளியிடும் பின்வரும் கூற்று விளக்கம் கூறுகிறது: * 'முடிவற்றது என நம்பிக்கையே நினைக்கும் துயரங்களை அனுபவிப்பது; மரணம் அல்லது இருள் ஆகியவற்றைக் காட்டிலும் இருண்ட குற்றங்களை மன்னிப்பது; சர்வ சக்தி படைத்ததெனத் தோற்றும் அதி காரத்தெ மறுத்தெதிர்ப்பது; அன்பு செலுத்துவது; சகிப்பது; நம்பிக்கையானது தான் சிந்தனை செய்யும் பொருளைத் தனது சொந்தச் சிதைவிலிருந்தே படைத்துத் தரும் வரையிலும், நம்புவது; மா றா:கலும் தடுமாறாமலும், வருந்தாமலும் இருப்பது ; டைட்டான்! உனது பெருமை யைப்போல், இதுதான் நல்லவரா வும், பெரியவராகவும், மகிழ்ச்சியும், அழகும், சுதந்திரமும் பெற்றவராகவும் இருப்பதாகும். இது ஒன்றுதான் வாழ்க்கை ! ஆனந்தம்; சாம்ராஜ்யம்; வெற்றி (வரிகள் 876-578): (To Suffer woes which Hope things infinite; To forgive wrongs darker than death (or right; To defy power, which seems omnipotent; To love, ard bear; to hope t}}| Hope creates From its own wreck the thing it countermplates Neither to change, nor falter, nor repent; This, like thy ஓory, Titan, is to be ! 64