பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Good, great and joyous, beautiful and free; This is alone life, Joy, Empire, and Victory). எனவே முடிவு காணாத துன்பங்களைச் சகித்துக் கொண்டும், பெருங் கொடுமைகளை மன்னித்துக் கொண்டும், அதே சமயம் சர்வ சக்தி படைத்ததாகக் கட்டிக் கொள்ளும் அதிகார மமதையை எதிர்த்துப் போராடிக் கொண்டும், தயக்கம் , மயக்கம், தடுமாற்றம் எதுவுமின்றி, அன்பு வழியில் நின்று தியாக வாழ்க்கையை மேற்கொள்வது தான் வாழ்க்கையின் ஆனந்தம், வெற்றி அனைத்தும் ஆகும் என்று ஷெல்லி கருதினான் எனக் கொள்ளலாம். . ஷெல்லியின் இந்த அன்பே ஆயுதம் என்ற கொள் கையை நினைவில் நிறுத்திக்கொண்டு, பாரதியிடம் வந்தால், அவனிடம் ஷெல்லியை யொத்த கருத்துக்களும் கண்ணோட்ட மும் தென்படுவதை நாம் உணரலாம். பாரதியின் வாழ்க் கையில் அவனைப்பற்றித் துப்பறிவதற்காக மாறுவேடங்களி- லும், மாறு பெயர்களிலும் அவனை நாடிவந்த ரகசியப் போலீஸாரையும், ஒற்றர்களையும் அவன் மன்னித்து மரியாதையோடு வழியனுப்பிவைத்த செய்திகளை நாம் வ. ரா. முதலியோர் எழுதிய பாரதி வாழ்க்கை வரலாறுகளிலி ருந்து தெரிந்துகொள்ளலாம். பகைவனுக்கும் அருள் செய்யும் மனப்பான்மை பாரதியிடமும் இருந்தது. அ வ ன து 'பகைவனுக் கருள்வாய்!' என்ற பாடல் பிறந்த விதத்தைப் பற்றிச் செல்லம்மா பாரதி (பாரதியார் சரித்திரம்) தமது நூலில் குறிப்பிட்டுள்ளார், பாரதியைப் பிரிட்டிஷ்காரர் களிடம் ஒப்படைப்பதற்காக வ ந் த ஒரு வஞ்சகன் பாரதியைப் பாண்டிச்சேரியிலிருந்து ஏமாற்றி அழைத்துச் சென்றதாகவும், வழியில் சந்தித்த நண்பரொருவர் விஷய மறிந்து பாரதியை அந்த வஞ்சகத்திலிருந்து மீட்டு வீடு கொண்டுவந்து சேர்த்ததாகவும், அவ்வாறு சேர்க்காது போயிருந்தால் பாரதி சிறை செல்ல நேர்ந்திருக்குமெனவும் அவர் குறிப்பிடுகிறார், இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அவன் 'பகைவனுக்கு அருள்வாய்' என்ற பாடலைப் பாடினான் : 165