பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒற்றுமை வேற்றுமையம்சங்களையும் இங்கு சுருக்கமாகக் காண்பது அவசியம். உண்மையான கவிஞன் 'காலத்தின் கண்ணாடி' என்று

  • சொல்வார்கள். கவிஞனுக்கும் அவன் வாழும் காலத்துக்கும்

நெருங்கிய தொடர்புண்டு; உண்மையில் குறிப்பிட்ட காலச் சூழ்நிலைதான் குறிப்பிட்ட கவிஞனை உருவாக்குகிறது என்று சொல்ல வேண்டும், இதன்படி, இவ்விரு கவிஞர்களும் தத் தம் நாட்டில் உருவான ஒரு குறிப்பிட்ட காலச் சூழ்நிலை யிலேயே உருவானார்கள் என்பதை நாம் காணலாம். ஆம், பாரதியும் ஷெல்லியும் இருவேறு புரட்சிகளின் விளைவாக உருவான கவிக்குழந்தைகள். ஷெல்லி 1789 ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சியின் குழந்தை ; பாரதி 1905-ம் ஆண்டு நிகழ்ந்த ருஷ்யப் புரட்சியின் குழந்தை. ""சுதந் திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முப்பெரும் கோஷங்களோடு பிறந்த குடியரசுத் தத்துவத்தை நிலை நாட்டும் முயற்சியாகப் - பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக, ஆங்கில நாட்டின். அரசியல், சமுதாயப் புரட்சிகள் பற்றிய சிந்தனையிலேயே புதிய மாற்றம் ஏற்பட்டது. பிரெஞ்சுப் புரட்சியின் “லட்சிய வேட்கை உத்வேகமானது, அதனை (ஆங்கிலச் சிந்தனையை) பாரா ளு ம ன் றச் சீர்திருத்தத்துக்கான சாதாரணக் கோரிக்கைக்கும் அப்பால் விரைவில் இழுத்துச் சென்றது; அது எல்லாவிதமான மானிட ஸ்தாபனங்களையும் புனரமைப்பதற்கான தனது திட்டத்தை உருவாக்கி, மனித இயல்பையே மாற்றியமைக்கும் திருந்திய நோக்கத்தை முன் னிறுத்தியது (Shelley, Godwin and Their Circle-H. N. Brailsford). மேலும் மன்னரின் 'தெய்வீக அரசுரிமைக்கு எதிராக, பாராளுமன்ற உரிமைக்காகவும் ஓட்டுரிமைக் காகவும் போராடி, பிரதிநிதித்துவம் கொண்ட நவீனகால அரசாங்க அமைப்பைக் கொண்டு வருவதில் ஓரளவு வெற்றி யும் கண்டதான 1688-ம் ஆண்டின் ஆங்கிலப் புரட்சியின் நூற்ருண்டு விழாவும் பிரெஞ்சுப் புரட்சியையொட்டிக் கொண்டாடப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் 'ஜன நாயக லட்சியங்களை முன்னிறுத்தி, புதிய சிந்தனைகள் 1k