பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜரீசுபமான வடிவமாகக் காண்கின் (**Man, the imperial shape”-பாடல் 3); தனது இஸ்லாமின் புரட்சியில் * 'உலகத் தில் அரண்மனைகளும் சிறைக்கூடங்களும் தாற்காலிக ட்மானிதவை, உயர்ந்த கோவில்களும்கூட, ஆவியைப்போல் மறைந்துவிடும். தனது மனோவுறுதியைத் தவிர வேறு யாவும் போய் மறைந்த பின்னரும் கூட, சக்தி படைத்ததாக நிலைத் திருக்கும் 10னேவு தினக் கொண்ட மனிதன் மட்டுமே நிலைத் திருப்பான் என்று (சருக்கம் 8, பாடல் 16) கூறி மனிதனின் பெருமையையும், அமரத் தன்மையையும் அவன் எடுத்துக் கூறுகிறான்; (Dungeons and palaces are transitory-- High temples fade like vapour-Man alone Remains, whose will has power when all beside) is goine), இத்தனைக்கும் மேலாக மனிதனின் பேராற்றலையும், அது சாதிக்கக்கூடிய சாதனைகளையும் குறித்து ஷெல்லிக்கு நெடிது நோக்கும் ஒரு கண்ணோட்டமும் இருந்தது. மனிதனின் பேராற்றலையும் பெருமையையும் பற்றி, ஷெல்லியின் 'கட் டறுந்த பிராமித் தியூ ஸில் பூமாதேவியே விதந்தோதிப் பேசு கிறாள். மனித குணங்களைப் பற்றிப் பேசிவரும் பூமாதேவி இறுதியில் பின்வருமாறு அவனது ஆற்றலை எடுத்துரைக் கிறாள்: எல்லாப் பொருள்களும் அவனது ஆற்றலைத்தான் வெளியிடுகின்றன. குளிர்ந்த சலவைக்கல், வர்ணம் ஆகிய வற்றின் வழியாக அவனது கனவுகள் கடந்து செல்கின்றன, தமது குழந்தைகள் அணியும் ஆடையணிகளை நெய்யும் தாய் மார்களுக்குதவும் பளிச்சிடும் நூலிழைகளும் அதனைப் பறை சாற்றுகின்றன. அவனது மொழியோ ஒரு நிரந்தரமான மாய மந்திரமான கீதமாகும்; உணர்ச்சியற்றும் உருவமற்றும் இருந் தன்வற்றையெல்லாம், எண்ணங்கள், வடிவங்கள் ஆகியவற் ஜின் கூட்டமாக்கி, அவற்றைத் திறமையான சுருதி யைத் தோடு அந்தக் கீதம் ஆட்சி செலுத்துகிறது. மின்னல் அவனது அடிமை; விண்ணகத்தின் அகண்ட 173