பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஞானரதத்' தில் பர்வத குமாரியின் வாய்மொழியாக மனித குலத்தின் இழிநிலையை இடித்துக்காட்டிய பாரதி தனது 'பாரத ஜனங்களின் தற்கால நிலைமை' என்ற பாட்டில் , அவர்களது பல்வேறு இழிதன்மைகளையும், வறுமை நிலையையும், அச்சத்தையும், பயத்தையும் சுட்டிக் காட்டி, இறுதியில், நண்ணிய பெருங்கலைகள்-பத்து நாலாயிரம் கோடி நயந்து நின்ற புண்ணிய நாட்டினிலே - இவர் பொறியற்ற விலங்குகள் போல் வாழ்வார். பக்கம் என்று நெஞ்சு பொறுக்காமல் புழுங்கித் தவிப்பதையும் நாம் அறிவோம். அதே போல் மனிதனின் கீழ்மைகளை யெல்லாம் சாபம் கொடுத்து விரட்டுவது போல், அவன் 'போகின்ற - பாரதத்தைப் போ, போ, மோ! என்று சபித்து ஓட்டுகின்ற பாட்டிலும் அவனது தாகத்தையும் தவிப்பையும் நாம் அறியலாம்; அதைத் தொடர்ந்து வருகின்ற பாரதத்தை 'வா வா வா' என்று வாழ்த்தி வரவேற்பதிலும் நாம் அ வ ன து நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் தெரிந்து கொள்ளலாம். மானிட ஜன்மத்தில் நிலவும் புன்மைகளைச் சுட்டிக் காட்டிய பாரதி மானிட ஜன்மத்தின் உயர்வையும் உணர்ந்தான்". எனவே தான் சுதந்திரத்தின் பெருமையைப் பற்றிப் பாடும்போது, மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும் மொய்மையை உணர்ந்தாரேல்-- அவர் ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற உடன்:2டு மாறுளதோ? (சுதந்திரப் பெருமை ்) என்று அவன் கேட்கிறான். மேலும் மனிதனின் பேராற்றலைப் பற்றி ஷெல்லி தனது, “கட்டவந்த பிராமித்தி"ஸில் விதந்தோதிப் போற்றுவது போலவே, பாரதியும் போற்றுகிறான். பாரத தேசத்து 17?