பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிலாந்தில் தோன்றியதில் வியப்பில்லை; மேலும், வளர்ச்சி பெற்று வரும் முதலாளித்துவப் பொருளாதாரச் சூழ்நிலை நிலவிய ஆங்கில நாட்டில், பண்டைப் பழமைகளை எதிர்த் தும், முடியரசை எதிர்த்தும் புதிய கருத்துக்கள் தோன்று வதும் சாத்தியமாக இருந்தன. இத்தகைய சூழ்நிலையில் தான் 1792-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதியன்று ஸ்லெக்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த பீல்ட் பிளேஸ் என்னு மிடத்தில் ஷெல்லி பிறந்தான்; வளர்ந்தான். பேராசிரியர் உட்பெர்ரி (Woolberry) என்பவர் பின்வருமாறு எழுதுகிறார்: ஷெல்லி சிந்திக்கவும், உணரவும் தொடங்கிய பொழுது, உயிர்த்துடிப்புள்ள ஆத்மாவாக மாறியபொழுது , (பிரெஞ்சுப் புரட்சியின்) உதய காலத்தின் முதல் செக்கரொளி கடந்து போய்விட்டது; ஆனாலும், அதே நம்பிக்கை நிறைவுதான் அவனுள் துள்ளியெழுந்தது; அது தவிர்க்க முடியாததாக இருந்தது; அது அந்தப் புரட்சியின் குழந்தையான அவனை, அதன் கவிஞனாகவும் மாற்றியது...." (The Greater English Poets of the 19th Century-W. M. Payne). இதே போன்று பாரதியும் ஒரு புரட்சியின் குழந்தை யாகவே வளர்ந்தான், 1882-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதியன்று பிறந்த பாரதி, வளர்ந்து வாலிபனான சமயம் 1904-ம் ஆண்டின் இறுதியில், தனது இருபத்திரண்டாவது வயதில், உலகத்து நிகழ்ச்சிகளை உடனுக்குடன் தெரியும் வாய்ப்பை அளிக்கும் பத்திரிகைத்துறையில் சுதேசமித்திரனில் பணி செய்ய வந்தான். அவன் வந்து சேர்ந்த காலம் இந்திய சரித்திரத்தில் ஒரு முக்கியமான காலம்.. 1992-5-ம் ஆண்டில் மாபெரும் நஷ்ய நாட்டுக்கும், சின்னஞ்சிறிய ஜப்பான் நாட்டுக்கும் நடந்த போரில், தாவீதின் கையால் கோலியாத் அடிபட்டு வீழ்ந்ததைப் போன்று ருஷ்ய நாடு வீழ்ச்சியடைந்தது. அதாவது, சின்னஞ்சிறிய ஆசிய நாடு ஒன்று, ஆகப் பெரிய ஐரோப்பிய நாடொன்றைத் தோல்வி காணச் செ ய் த து. . இந்த நிகழ்ச்சி ஐரோப்பியக் காலனி ஆதிக்கக்காரர்களிடம் சி க் கி யி ரு ந் த ஆசிய மக்களுக்கு ஒரு புதிய விழிப்பையும், நம்பிக்கையையும்