பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் சாதிக்க வேண்டிய காரியங்களை அவன் திட்டமிட்டு அடுக்கிக்கூறும் பாட்டு, அவனது நெடிது நோக்கும் கண்ணோட்டத்தைப் புலப்படுத்துகின்றது என்றே சொல்ல வாம் (பாரததேசம்; பாட்டு 3, 7, 8, 10, 13, 12). வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம் '. வேறு பல பொருளும் குடைந்தெடுப்போம் . ... காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்,... பட்டினில் ஆடையும், பஞ்சில் உடையும் ". A. பன்னீர் மலைகளென வீதி குவிப்போம்... நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்; ஞாலம் நடுங்க வரும் கப்பல்ஃள் செய்வோம்.... வனை எனப்போம், கடல் மீனை யளப்போம் .. • சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்......, காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;; கலை வளர்ப்போம்; கொல்லர் உலை போர்ப்போம்; ஓவியம் செய்வோம்; நல்ல ஊசிகன் செய்வோம்; உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம், இந்த ஆணைகளைக் காணும் போது, மனிதனின் பேராற் தலைக் குறித்து ஷெல்லியின் பூமாதேவி கூறிய கருத்துக்களை உறுதிப்படுத்தி, அவற்றைத் திட்டங்களாக உருவாக்கி, பாரதி வடித்தெடுத்து வளர்த்துக் கொடுக்கிறான் என்றே சொல்லத் தோன்றும். மேலும், ஷெல்லியின் கனவுகள் நனவானதைப் போலவே, பாரதியின் கனவுகளும் நவ பாரதத்தின் வளர்ச்சியாலும், விஞ்ஞான உதவியாலும் நாளும் நனவாகி வருவதையும் நாம் காண முடியும்; விஞ்ஞானமும் கவிதையும் சேர்ந்து சமைந்த ஷெல்லியின் பொற்கால சமுதாயத்தைப் போன்று' , விஞ்ஞானமும் கலையும் கவிதையும் சேர்ந்து 'சமையும் விதத்தில் பாரதி நவபாரத சமுதாயத்துக்குத் திட்டங்கள் வழங்குவதையும் இங்குக் "காண்கிறோம். 178