பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் அழகும், அழகுக் காதலும் ஷெல்லி , பாரதி இரு கலிஞர்களுமே காதலைட் போற்றிய கவிஞர்கள்தான்; இருவரும் காதலில் அழகையும் அமரத்து வத்தையும் ஆக்க சக்தியையும் கண்டவர்கள் என்றும் சொல்ல வேண்டும். ஷெல்லியின் படைப்புக்களில் பெரும், பாலானவை காதலைப் பலவாறு போற்றிப் புகழத் தலற வில்லை. அவனது 44 இஸ்லாமின் புரட்சி, சுட்டறுந்த பிராமித்தியூஸ்' ஆகியவற்றில் ஒழுக்க உலகத்தை மேலாட்சி செய்யும் ஒரே நியதியாகக் காதல்தான் இருக்க வேண்டும் என்ற கருத்தே பிரதிபலிக்கிறது எனலாம். காதல் என்பது மனித உள்ளத்தின் லட்சிய வேட்கையைத் தூண்டும் சக்தி பாகவும், அதனை உயர் நிலைக்குயர்த்தும் உணர்ச்சியாகவும் தான் அவனுக்குத் தோன்றியது. மேலும் மனித குலத்துக்குப் புத்துயிரும், புது மலர்ச்சியும், நாகரிகத் தன்மையும், சமுதாய உணர்ச்சியும் வழங்கக்கூடிய முக்கியமான சக்தி யாகவும் அது அவனுக்குக் காட்சியளிக்கிறது. பிரபஞ்சம், உலகம் எல்லாவற்றின் வாழ்நிலைக்கே காதல்தான் ஆதார மாக இருக்கிறது என்றும், அதனுல்தான்' அழ3)31: இயங்கு இன்றன, நிலைத்திருக்கின்றன என்றும் அவன் கருதினான், மேலும் காதலுக்கு மரணமில்லை என்றும், வாழ்க்கையே காதல் என்றும், காதல் - ஆற்றல் வாழ்க்கையில்லை என்றும் அவன் கூறினால். காதல் பற்றிய அவளது இத்தகைய கண்ணோட்டத்தை நாம் அவனது கவிதைகள் பலவற்றிலும்