பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணலாம். ** காதல் தத்துவம்' (Love's Philosophy} என்றே ஒரு சிறு கவிதை. அது பின் வருமாறு:

  • 'ஊற்றுக்கள் நதியோடு கலக்கின்றன. நதிகளோ

கடலோடு கலக்கின்றன. விண்ணகத்தின் காற்றுக்கள் ஓர் இனிய உணர்ச்சியோடு எப்போதும் கலக்கின்றன, இந்த உலகத்திலே எதுவுமே தனியாக இல்லை. எல்லாப் பொருள் களும் ஒரு தெய்வீகமான நியதியால் ஓருணர்ச்சியோடு சந்தித்து ஒன்று கலக்கின்றன. நான் மட்டும் உன்னோடு ஏன் கலக்கக் கூடாது? 'அதோ பார், மலைகள் உயர்ந்த விண்ணரங்கை முத்த மிடுகின்றன; அலைகள் ஒன்றையொன்று பற்றிப் பிடிக் கின்றன. எந்த ஒரு மலரும் தன் சகோதர மலரை ஏளனம் செய்தால் மன்னிக்கப்படுவதில்லை. மேலும் சூரியவொளி பூமியைத் தழுவுகிறது; சந்திரக் கதிர்கள் கடலை முத்தமிடு கின்றன. நீ மட்டும் என்னை முத்தமிடாவிட்டால், இந்த இனிய பணியெல்லாம் எதற்குத்தான் பயனாகும்?. (The fountains mingle with the river And the rivers with the ocean, The winds of Heaven mix for ever With a sweet emotion; Nothing in the world is single; AYI things by a law divine In one spirit meet arid Inningle Why not with thine? See the mountains kiss high Heaven And the waves clasp cne another; No sister-fiower would be forgiven if it is disdained its brother; And the Sunlight clasps the earth And the moon bearns kiss the sea; What is all this sweet work worth If tida kiss not me?) இந்த உலகத்தில் எல்லாம் ஒன்றையொன்று தழுவித் 180