பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Beside me, gathering beauty as she grew, Like the bright shade of sorne immortal drearn Which walks, when tempest sleeps, the wave of life's dark stream), லயானோடு பன்னிரண்டு வயசுள்ள விளையாட்டுத் தோழியாகப் பழகி, அவனது அன்பைப் பெற்றதோடு மட்டும் மல்லாமல், அதன்பின் மனித வாழ்க்கையில் அவன் நேசிப்பதற்கான எல்லாமே அவளாக' மாறிவிட்ட சித்னா வைப் பற்றி ஷெல்லி இவ்வாறு பாடுகிறான். பூமியின் மீது நடமாடும் அந்தக் கன்னி அதே சமயத்தில் அழியாத கனவின் பிரகாசமான நிழல் போன்ற கனவுக் கன்னியாகவும் வான மண்டலத்திலே மிதந்து செல்லும் பனிமேக மொத்த லாகவம் படைத்த கந்தர்வ சுந்தரியாகவும் காட்சி தருகிறாள். ' ' அட்லாஸ் மோகினி' (The Witch of Atlas) என்ற கவிதையிலோ அதன் நாயகியாக வரும் அந்த மோகினி பூலோக வாசியல்ல. அவளோ ஒரு சமுத்திரக் கன்னிக்கும் சூரிய தேவனுக்கும் பிறந்தவள். இந்த மேகிளீயேபா தான் விரும்பும் எவரது இதயங்களையும் விடுதலை பெறச் செய்யும் சக்தி பெற்றவள்; ஊமையாகக் கிடக்கும் . மக்களின் விருப்பு எங்களையெல்லாம் நிறைவேற்றக் கூடியவள், இந்த வானுலக பே?' கினி வாயு வடிவத்திலிருந்து பல்வேறு மாற்றங்களை எய்தி, அழகிய பெண்மை வடிவமாக மாறியவள் , இவளைப் பற்றி ஷெல்லி பின்வருமாறு பாடுகிறான்: " 1. தனது சொந்த எழிலிலிருந்து தோற்றிய ஒளில யயே உடையாகத் தரித்திருந்த அழகிய பெண்மணி அவள்; அவளது ஆழக் கருவிழிகளோ, ஒரு கோபுரத்தின் பிளவுண்ட கூரையின் வழியாகப் பார்க்கப்படும் ஆழங்காண முடியாத இரவின் இரு வாசல்களைப்போல் இருந்தன, அவளது கூந்தலோ கரிய கூந்தல்; அவளது வடிவத்தை எண்ணரிப்பார்க்கும்போது, மயங்கிய மூளை 4.3ரவசத்தால் கிறுகிறுத்துச் சுழல்கிறது; அ வ எ து மிருதுவான புன்னகையோ வெகு தூரம் ஒளி வீசியது. அவளது தணிந்த - 192