பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதான் அற்புதம்; நீயே அழகு; நீயே பயங்கரம்! இயற்கைக் கலையின் இங்கிதமும் நீ! வரிகள் 22-30): (Seraph of Heaven! too gentle to be humat, . Weiling beneath that radiant forms of wCman All that is ir:Supportable in thee of light, and love, and immortality! Sweet Bennediction in the eternal curse! Veliefl glory of this lampless riverse! Thot1 BMoon beyond the clouds! Then living form Amio1:g the Dead! Thou Star above the storm! Th!! Wonder, and thou Beauty, and thou Terror! Thot Harmony of Nature's art!....) மேலும் அவன் அவளை ஆனந்தத்தின் அந்தரங்க ஊற்றாக . வும், வானில் தனிமையிலே உல்லாத தாரகையாகவும், இருண்ட உடறுத்த முகங்களுக்கு மத்தியிலே தோன்றும் புன் வகை யாகவும், கரகரத்த குரல்களுக்கு மத்தியில் ஒலிக்கும் இனிய குரலாகவும், துன்பத்தை மறக்கச் செய்து தூங்க வைக்கும் சங்கீதத்தைக் கற்க, காதல் வழங்கிய வீணையாக . வும், புதையுண்ட செல்வமாகவும், இறக்கையற்ற இன்ட்ரத்தின் இளம் எண்ணங்களின் பிள்ளைத் தொட்டிலாகவும் காண் கிறான். இவ்வாறெல்லாம் அவளை உவமித்துக் கூறும் ஷெல்லி, * * ஜீவனுள்ள சூரியன் பொன்னிறத் தழல் நிறைந்த தன்" கலசத்திலிருந்து உனக்கு ஒளியுணவு அளிப்டான்; சந் திரிகை உனது மாறாத புன்னகைகளில் தனது கொம்பு வளைவை மறைத்து வைப்பாள்; போற்றித் துதிக்கும் காலை யும் மாலையும், ஒளிகளும் நிழல்களும் அமைதியான காற்றும் கலந்த களப தூபங்களால் உனக்குத் தலைவணக்கம் செய் யும்,..,"* (வரிகள் 375-379) என்றும். பாடுகிருன்.. அதாவது இயற்கையனைத்துமே தமது எழிலை அவளுக்கு வழங்கி அவளைத் துதி செய்யும் என்கிறான்: (The living sun will feed thee from, its 1zra of golden fire; the Moon will tell her horn In thy fast Sriniles; adoring eyern and morn 194