பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்ற குற்றம் அவை தீர அணைய அமுக்கிக் கட்டீரே! (நாச்சியார் திருமொழி 13.7) எள்ற ஆண்டாளின் பாசுரத்தில் சரீராம்சமான காதல் பச்சை யாக ஒளிவு மறைவின்றி வெளிப்படுகிறது என்பதை 4ம் நாம் காண முடிகிறது. ஆண்டாளைக் காட்டிலும் பாரமார்த்திகமாகப் பாடியவர் எனச் சிலர் சொல்லும் மாணிக்கவாசகரும் கூட, சூடுவேன் பூங்கொன்றை; சூடிச் சிவன் திரள்தோள் கூடுவேன்; கூடி, முயங்கி, மயங்கி நின்று, ஊடுவேன்; செவ்வாய்க்கு உருகுவேன் , .. (திருவாசகம், திரு அம்மானை, 17) என்று பாடும்போது, சரீராம்சக் காதலுக்குரிய ' திரள் தோளை யும், 'செவ்வாயையும் நினைவு கூரத்தான் செய். கிருர்; அது மட்டுமல்லாமல், அந்தத் திரள் தோளைக் கூடி முடிந்த பின்னரும், மீண்டும் ஊடுவ தாகப் பாடி, அந்த ' வேட்கை தீராத காதலுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கிறார். எனவே பாரமார்த்திகத்திலே அதிகமாகக் கவனம் செலுத் இய பாவலரும் கூட, நாயக நாயகி பாவத்தில் மண்ணுலகத் தின் சரீராம்சப் பிடிப்பை முற்றிலும் அறுத்துக்கொண்டு, சூட்சுமார்த்தமாக அந்தக் காதலை வெளியிட இயலவில்லை . என்பது கண்கூடு. ஆனால், . .. காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்; கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்; காதலினால் சாகாமல் இருத்தல் கூடும்; கவலை போம், அதனாலே மரணம் பொய்யாம். (சுயசரிதை-49) என்று பாடி., ஜீவன் முக்திக்கே காதலை ஒரு வழிகாட்டியாகக் கொள்கிறான் பாரதி. மேலும் இந்த மண்ணுலக வாழ்க்கை யைப் பெரிதும் வலியுறுத்திப் போற்றியவன் அவன்; அதனை 202