பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மையல் விழி தோற்றுவிக்கும் வண்மை நாடு பேரறழும் பெருந்தொழிலும் பிறங்கு நாடு பெண்களெல்லாம் அரம்பையர் போல் ஒளிரும் நாடு ! (பாடல்கள் 117, 118) என்றே அவன் பாடுகிறான். இதனை நாம் அவனது கிருத யுக சமுதாயத்தின் ஒரு கற்பனைக் காட்சி என்றே கொள்ள லாம். மேலும் அவன் தனது 'சந்திரிகையின் கதை'யில் காதலின் உச்ச பட்சமான உயர்வைக் குறிப்பிடும்போது,

  • இவ்விருவரும் ஒருவருக்கொருவர் படைத்த காதல்

மானுஷிகமன்று; தெய்வீகம். அது கலியுகத்துக் காதலன்று, கிருத யுகத்துக் காதல்** (அத்தியாயம்-விடுதலை) என் று லட்சியக் காதலின் தன்மையை எடுத்துரைக்கிறான் என் பதையும் காணலாம்.