பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில தனிப் பாடல்கள் மேல் காற்று ஷெல்லியைப் பற்றி ஓரளவேனும் பரிசயம் செய்து கொண்டிருப்பவர்களும்கூட, அறிந்து கொண் டிருக்கக்கூடிய ஷெல்வியின் தனிப்பாடல்கள் இரண்டுண்டு. ஒன்று: 'மேல் காற்று' (Ode to the West Wind); மற்றொன்று * வானம்பாடி' {70 a Skylark). இவ்விரண்டு பாடல்களும் அருமையான தனிப்பாடல்கள் - இவை இரண்டுமே பாரதியை வெகுவாகக் கவர்ந்திருந்தன. மேலும் இவற்றால் ஏற்பட்ட இதய ஒலியால் விளைந்த பாரதியின் படைப்புக்களும், கருத்துக் களும் சில உண்டு என்பதையும் நாம் காணலாம். இந்த இரு பாடல்களும் முறையே 18 19-ம் ஆண்டிலும், 18 20-ம் ஆண்டிலும் இயற்றப்பட்டவை. இந்தப் பாடல்களைப் பற்றி எழுதும் போது விமர்சகர் கார்லோஸ் பேக்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: இந்தப் பாடல்களில், * அழிவைத் தொடர்ந்து புத்துயிர் தோன்றுமென்றும், மாற்றம் என்றால் மறைந்தே போவதென்று அர்த்தமல்ல வென்றும், உலக மழானது அங்கீகரிக்கப்படாத சட்ட நிர் மாணிகளான, தீர்க்க தரிசனம் வாய்ந்த கவிஞர்களின் கூற்றில் கவனம் செலுத்தி னால் அதற்கு இன்னும் நம்பிக்கைக்கு இடமுண்டு என்றும் தனக்குத் தானே உறுதிப்படுத்திக் கொள்வதற் கான ஒப்புவ 208