பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மையை இயற்கை யுலகத்தில் அவன் தேடிக் காண்பதை ஒருவர் கண்டுணரலாம்"* (Shelley's Major Poetry-Carles Baker). இந்தக் கூற்றைப் புரிந்துகொள்ள நாம் இவை இயற்றப் பாட்ட காலத்தில் ஷெல்லியின் வாழ்க்கைச் சூழ்நிலையும் மனோ நிலையும் எவ்வாறிருந்தன என்பதையும் ஓரளவு தெரிந்து கொள்ள வேண்டும். ஷெல்லியின் வாழ்க்கை வரலாற்றை முன்னமேயே பார்த்து விட்டோம். இங்கும், சில விஷயங்களை மட்டும் நினைவூட்டிக் கொள்வோம். 1819 -ம் ஆண்டில் ஷெல்லி கிட்டத்தட்ட தேசப் பிரஷ்டனாகி, தாயகமான இங்கிலாந்தை விட்டு நிரந்தரமாக வெளியேறி, இத்தாலி நாட்டில் பிளாரன்ஸ் நகரத்துக்கு அருகிலுள்ள ஆர்னோ என்ற ஊரில் தங்கியிருந்தான். சமுதாயத்தைச் சீர்திருத்தும், புதிய சமுதாயத்தைக் கனவு காணும் புரட்சிப் புலவனாக இருந்த ஷெல்லிக்கு அவனது தாய்நாட்டில் வரவேற்பில்லை. இங்கில7 ந்து அவனை நாஸ்திரன் என்று ஒதுக்கித் தள்ளியது. 'கல்யாணம் என்ற கட்டுத்தளை யே கூடாது என்று உளறிய பைத்தியக்காரன் வெறும் பைத்தியமாக இல்லாமல் கல்லை யும் விட்டெறியும் பைத்தியக்காரனைப்போல் ' , இரண்டாம் மனைவி ஒருத்தியையும் தேடிக்கொண்டு, விட்டானே என்று, பழி தூற்றியது. பத்திரிகைகள் அவனைப் பாராட்ட முன் வராவிட்டாலும் அவனைப் பழிதூற்றப் பின்வாங்கவில்லை. 'காலாண்டு விமர்சனம்' (Quarterly Review} என்ற பத்திரிகை ஷெல்லியைத் தாக்குவதைத் தனது கடமைகளில் ஒன்றாகக் கொண்டிருந்தது. இலக்கிய உலகம் ஷெல்லியின் மதிப்பை , உணரவில்லை; அங்கீகரிக்கவில்லை. உதாரணமாக, முன்னே ரிட த்தில் நாம் குறிப்பிட்டுள்ள நூலாசிரியரான வில்வியகம் ஹாஸ்லிட் 'சகாப்தத்தின் உத்வேகம்' (Spirit of the Age-William Hazlitt) என்ற தமது நூலில் ஷெல்வி வாழ்ந்த காலத்தின் உத்வேகம் பற்றி எழுதியுள்ளார்; அந்த நூலில் ஷெல்லியின் மனத்தைக் கவர்ந்த காட்வினை யும், ஷெல்லி வாழ்ந்த காலத்துக் கவிஞனான பைரனையும் குறித்து, தனிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்; ஆனால் அந்த நூலில் அதே சகாப்தத்தில் ஷெல்லி என்றொரு 207