பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் வாழ்ந்தான், அவன் உத்வேகமான கவிதை களையும் பாடிக் குவித்தான் என்ற தார்மீகமான குறிப்புக்கூடத் தென்படவில்லை இவ்வாறு பிறந்த நாட் டா லும் ஏட்டாலும் புறக்கணிக்கப்பட்டு வாழ்ந்த ஷெல்விக்கு வேறு சிரமங்களும் ஏற்பட்டிருந்தன. அவனது முதல் மனைவிக்குப் பிறந்திருந்த குழந்தைகளை அவள் இறந்த பின்னர் அவனிடம் ஒப்படைக்க, இங்கிலாந்து நீதி மன்றம் மறுத்து விட்டது. அவன் யோக்கியப் பொறுப் மற்ற நாஸ்திகன் என நீதிமன்றம் கருதியதே இதற்குக் காரணம், இந்தச் சந்தர்ப்பத்தில் தான் அவன் இங்கி லாந்தின் லார்டு சான்ஸலரின் (நீதிபதி மீது குற்றம் சாட்டி To the Lord Chancellor) ஒரு கவிதை பாடினான். அந்தப் _ாடலில் தன்னிடமிருந்து தனது குழந்தைகளைப் பிரித்த கொடுமையால் மனம் குமைந்து அவன் அவரைச் சபித் தான். 'ஆம், ஒரு தந்தையை அழுது முனக வைக்கும் அவல நிலையானது அவனைப் பின்வருமாறு கதற வைக்கிறது: என்னுடைய குழந்தைகள் இனியும் என்னுடையவை அல்ல. அவற்றின் உடம்பிலே ஓடும் ரத்தம் என்னுடைய தாக இருக்கலாம். ஆனால், கொடுங்கோ லனே! அவர்களது கறைப்பட்ட ஆத்மாக்கள் உன்னுடையதாகி விட்டன! ஒரு தந்தையின் பாச உணர்ச்சியை வெளியிடும் அருமையான கவிதை அது, (பாட்டு 75); (Yes, the despair which bids a father groan, And cry, 'My children are no longer rmine-- The blood within those veins may be mine own, But-Tyrant--their polluted souls are thine') ' இவ்வாறு முதல் தாரத்தின் மூலம் தனக்குப் பிறந்த குழந்தைகளைத் தன்னால் வளர்க்க முடியாத சூழ்நிலைக்கு ஷெல்லி ஆளாகி விட்டாலும், அவனது இரண்டாம் தார மான மேரி ஷெல்லியின் மூலம் அவனுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்திருந்தது. ஆங்கில நாட்டு நீதிபதியைக் கண்டித்து அவன் மேற்கூறிய பாடலைப் பாடிய 1817-ம் - ஆண்டில், வில்லியம் ஷெல்லி என்ற பெயருள்ள. அந்த ஆண் 203