பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( பறந்தோடும் பேய்களைப், முன்னால் ; போலிருந்தான் ஷெல்லி, இந்தக் காலத்தில்தான் அவன் தனது 'மேல்காற்று' என்ற பாடலைப் பாடினான், ஆர்னோவில் தங்கி யிருந்த காலத்தில், மாலை நேரத்தில் இலையுதிர் காலத்து மழைக்கான இடிமின்னலோடு வீசிய சூறைக்காற்றைப் பார்த்தபோதுதான், இந்தக் கவிதையைத் தான் எழுதியதாக ஷெல்லி தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ளான். மேற்கூறிய பின்னணியில் இந்த எழுபது வரிக்கவிதையை நாம் புரிந்து கொள்வது சுலபமாக இருக்கும். மேல் காற்று மூர்க்கமாக வீசுகின்றது. இலையுதிர் காலத் தின் மூச்சுப்போன்ற அந்தக் காற்று வீசத் தொடங்கியதும், மந்திரவாதியின் மந்திர சக்தியின் முன்னால் நிற்கமாட்டாது விழுந்தடித்தோடும் பேய்களைப் போல் பழுத்து உதிர்ந்த இலை கள் பறந்தோடுகின்றன. அதே சமயம் அந்தக் காற்று இறகு முளைத்த விதைகளையும் வாரிச் சுமந்து, அவற்றைச் சதுப்பு நிலங்களில் ' கொண்டு போய் விதைக்கின்றது , அவ்வாறு விழுந்த விதைகள் சமாதிக்குள் புதையுண்ட சவம் போலிருந்தாலும், மேல் காற்றின் சகோதரியான ' வசந்தம் வரும்போது, அதன் குழல் நாதத்தின் முழக்க மானது சொப்பன நிலையிலுள்ள பூமிப் பரப்பைச் சிலிர்க்க வைத்து, அந்த விதைகளை முளைக்கச் செய்து, வர்ண ஜாலமும் மணவெறியும் நிரம்பிய மலர்ச் செடிகளைத் தோற்று வித்து விடுகிறது. எனவே, “எங்கெங்கும் அலைந்து திரியும் மூர்க்கமான ஜீவனே! (மேல் காற்றே!) ஆக்குபவனும் அழிட்டி பவனுமாக உள்ளவனே! கேள்! (நான் சொல்வதைக்) கேள்! என்று ஷெல்லி அந்தக் காற்றை நோக்கிப் பாடு கிறன் (வரிகள் 13-14}; (Wild spirit, which, art moving everywhere; Destroyer and preserver; hear, oh heart) ""பூமியின் மீது மரங்களை அலைத்து, இலைகளை உதிர்த்து அவற்றை வாரிச் செல்வதுபோல், அந்த மேல் காற்று வானத் திலும் தன் கைவரிசையைக் காட்டுகிறது. அது மேகங்களை அலைத்து உலுக்கி, அவற்றைக் கடலிலிருந்தும் வானத்தி லிருந்தும் பூமியின் மீது உதிர்த்துத் தள்ளுகிறது. ஏதோ ஒரு 211