பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறிகொண்ட சாமியாடியின் தலையாட்டத்திலே அவிழ்ந்து குலைந்து சுழன்றடுட்ட கூந்தலைப்போல், வரப்போகும் புயலை அறிவுறுத்தி, அந்த மேகங்கள் பரந்து அலைகின்றன. மாள் கின்ற ஆண்டின் மரண கீதம்போல் மேல் காற்று ஓலமிடுகின் றது. மின்னல் வெட்டும், இடி முழக்கமும், பேய்மழையும் கலந்த பெருஞ் செயலால், அது ஒருபுறத்தில் ஆக்க சக்தி t.JKாகவும், மறுபுறத்தில் அழிவுச் சக்தியாகவும் செயல்படுகிறது. இவ்வாறு செயல்படும் மேல் காற்றை நோக்கி, ஷெல்லி தன் மனத்தில் எழுந்த எண்ணங்களை வெளியிடுகிறான். எப்படி?

    • நான் மட்டும் நீ சுமந்து செல்லும் ஒரு லாடிய இலை

LAKாக இருந்தால்! உன்னோடு பறந்தோடும் ஒரு வேகமான மேகமாக இருந்தால்! உனது வலிமையைத் தாங்க மாட்டா மல், மூச்சுத் திணறும் ஓர் அலையாக, உனது வலிமையின் உத்வேகத்திலே பங்கு கொள்பலனாக, உன்னைக்காட்டிலும் குறைந்த சுதந்திரம் பெற்றவனாக இருந்தால்!... கட்டுப்படுத்த " முடியாதவனே! நான் எனது பாலிபப் பருவத்தில் இருந்த arrதிரி இப்போது இருந்தால், வான மண்டலத்தில் உனது நட மாட்டங்களோடு . நானும் உனது தோழனாகச் சேர்ந்து திரிந்துவிட முடியும், அப்போதோ உனது வான வேகத்தை யும் மிஞ்சிப் பறப்பது எனக்கு ஒரு கனவாக இருந்ததில்லை. அப்போதாயின், எனது வேதனை மிக்க அவசியத்தின் காரண மாக இப்போது நான் உன்னை வேண்டித் துதிப்பதுபோல், என்றும் உன்னை வேண்டிக் கொண்டிருக்கவே மாட்டேன் . ஆ! என்னைகம் ஓர் அலையைப் போல், இலையைப் போல், மேகத்தைப் போல் தூக்கிச் சுமந்து செல்! நான் வாழ்க்கையின் முட்களின் மீது வீழ்கிறேன்" ! ரத்தம் கொட்டுகிறேன்! காலத் தின் கனத்த தாை என்னை விலங்கிட்டுப் பணிவித்துவிட்டது, " நானும் உன்னைப்போல் அடங்காதவனாகவும், வேகமிக்சுவ னாகவும், பெருமிதம் படைத்தவனாகவும் இருந்தவன் தான்!**... (வங்கள் 43-58): If I were a dead leaf thou raightest bear; . If I were a swift cloud to fee' with thee; - A wave to pant beneath thy power, and. share 21.2