பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்கிறேன். நான் சக்தி குமாரன்'. இவ்வாறு சொல்லி இதற்கு ஆதாரமாக உழைய வேத மந்திரம் ஒன்றையும் மேற்கோள் காட்டுகிறான். இரண்டாம் பகுதியில் கடலில் புயற்காற்று விளைக்கும் கோரத்தைப் பற்றிய ஒரு சித்தி ரத்தை அழகுபட வருணித்து முடிக்கிறான், இந்த இரு சித்திரங்களிலிருந்தும் அவன் ஒரு முடிவுக்கு வருகிறான், கயிறுகளை அசைத்து உயிர் கொடுப்பவனும் காற்றுத் தேவன் தான். கடலிலே சூறாவளி எழுப்பி, கப்பலை அடித்து நொறுக்கி உயிர்களைப் பலிகொண்டு ஊழிக் கூத்தாடுபவனும் காற்றுத் தேவன்தான். எனவே ஷெல்லியைப் போலவே காற்றை ஆக்குபவனாகவும் அழிப்பவனாகவும் {Destroyer and Preserver) காண்கிறான் பாரதி. எப்படி?

  • 'காற்றே யுக முடிவு செய்கிறான் ,

காற்றே காக்கின்றான் . அவன் நம்மைக் காத்திடுக." காற்று அழிக்கவும் செய்யும்; ஆக்கவும் செய்யும். இருந் தாலும் காற்றுத் தேவன் தான் நம்மைக் காக்கவேண்டும். எனவே அவனது அசுரத்தனமான வலிமையையும் நாம் வணங்குவோம் என்று பாரதி கூறுகிறான். இதனை 3, 4 ஆகிய பகுதிகளில் காற்றின் மூர்க்காவேசக் காட்சிகளை வருணித்து விட்டு முடிவு கட்டுகிறான். மேலும் 5-வது பகுதி யில் காற்றைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறான்:

    • உயிருடைவன எல்லாம் காற்றின் மக்களே

என்பது வேதம். உயிர்தான் காற்று. உயிர் பொருள், காற்று அதன் செய்கை .. பூமித்தாய் உயிரோடிருக்கிறாள். அவளுடைய மூச்சே பூமியிலுள்ள காற்று. காற்றே உயிர். அவன் உயிர்களை அழிப்பவன். காற்றே உயிர், எனவே உயிர்கள் அழிவதில்லை.... தோன்றுதல், வளர்தல், மாறுதல், மாறதல்- ' எல்லாம் உயிர்ச் செயல். உயிரை வாழ்த்துகின்றோம் ! 218