பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாறு காற்றையே உயிராகக் கண்டு, 'அது உயிர் களை அழித்தாலும் உயிர்களுக்குரிய செயலான மாறுதலைத் தான் நிகழ்த்துகின்றது, எனலே உயிர்கள் அழிவதில்லை. அதனால் அவை வாழ்த்துக்குரியன்' என்று கூறுகிறான். இதன் பின்னர் ஷெல்லியைப் போலவே காற்றை நோக்கி, பாரதி யும் பேசுகிறான்:

  • *காற்றே வா,

மகரந்ததி தூளைச் சுமந்து கொண்டு, மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா . இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து, மிகுந்த ப்ராண ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு. காற்றே வா, எமது உயிர்-நெருப்பை நீடித்து நின்று நல்லொளி தருமாறு நன்றாக வீசு. சக்தி குறைந்துபோய், அதனை அவித்து விடேேத. பேய்போல வீசி, அதனை மடித்து விடாதே. மெதுவாக, நல்ல லயத்துடன் நெடுங்காலம் நின்று வீசிக் கொண்டிரு. உனக்குப் பாட்டுக்கள் பாடுகிறோம், உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம், உன்னை வழிபடுகிறோம். ஆனால் பாரதியோ. இங்கு ஷெல்லி) யப்போல் மன மொடிந்த நிலையில் வேண்டுகோள் விடுக்கவில்லை; கெஞ்சிக் கேட்கவில்லை; மாறாக, அவன் காற்றுக்குக் கட்டளையிடுகிறான். எங்கள் உயிரைச் சுடர்விட்டுச் பிரகாசிக்கச் செய்வதன்றி, அதனை அவித்துவிடாமல் நீ பார்த்துக் கொண்டால் போதும், மற்றவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்ற தொனி யில் தன்னம்பிக்கையோடு பேசுகிறான். இந்த நம்பிக்கை யோடு, அழிக்கும் சக்தியுள்ள காற்றையும் நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்பதற்கும் அவன் வழி கூறு கின்றான்: - - 219