பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகதி முதலைக்கு அதுலே வைகுண்டம் என்ற நிலையில் வா;றாமல், வாழ்க்கையில் சேற்றிலேயே அழுந்திக் கிடக் காமல், வெற்றியை நாடி விண்ணில் பறக்கவேண்டும். அவ் வாறு திரிவதற்கேற்ற மனமும் நமக்கு இருந்தாக வேண்டும். இத்தகைய தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் இங்கு பேசுகிறான் பாரதி. அது மட்டுமல்ல, காற்றை நோக்கியே பின் வருமாறு பதமுறுத்துகிறான் : தென்னையின் கீற்றுச் சலசல.என்றிடச் செய்து வரும் காற்றே! உன்னைக் குதிரைகொண் டேறித் திரியுமோ உள்ளம் படைத்து திட்டோம்! (பாட்டு -4) இங்கோ 'காற்றே! என்னைத் தூக்கிச் செல்! * என்று ஷெல்லியைப்போல் வேண்டுகோள் விடுக்காமல், 'காற்றே! . உன்னை அடிமைகொண்டு, உன்மீது குதிரையேறி, வானில் உலவித் திரியும் மனவுறுதியை நாங்கள் பெற்றுவிட்டோம்!* என்று தெம்போடு பேசுகிறான் பாரதி. காற்றைப் பற்றிய இவ்விரு கவிஞர்களின் கருத்தையும் பார்க்கும்போது , பாரதி ஷெல்லியைக் காட்டிலும் மேலான நிலையில்தான் நிற்கிறான் என்பது தெளிவு . 'மேல் காற்று' அற்புதமான கவிதைதான்; ஆனால் பாரதியிடமோ அதைக் காட்டிலும் அற்புதமான கருத்துக்கள் இருக்கின்றன, ஷெல்லியின் கவிதையில் நம்பிக்கை வறட்சியும் வேதனையும் தென்படுகின்றன; எனினும் வசந்தம் வராமலா போய்விடும் என்று அவன் இறுதியில் தனக்குத்தானே நம்பிக்கை ஊட்டிக் கொள்கிறான். பாரதியிடமோ அத்தகைய நம்பிக்கை வறட்சிக்கே இட மில்லை, வேதனையும் துயரும் அவனுக்கு விரக்தியையும் நிராசையையும் கொண்டு வந்து விடவில்லை, இந்த உண்மை 'களையும் நாம் இங்கு உணர்கிறோம். 221