பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிக்கடி பொறாமையுண்டாகும், ஆஹா! உடலை எவ்வளவு லாகலத்துடன் சுமந்து செல்கிறது. இந்தக் குருவிக்கு எப்டேjாதேனும் தலைநோவு வருவதுண்டோ ? ஏது , எனக்குத் தோன்றவில்லை, ஒரு முறையேனும் தலைநோலை அனுபவித்த முகத்திலே இத்தனை தெளிவு இருக்க நியாயமில்லை. பயமும், மானமும், மனிதனுக்குள்ளது போலவே குருவிக்கும் உண்டு, இருந்தபோதிலும் க்ஷணந்தோறும் மனிதனுடைய நெஞ்சைச் செல்லரிப்பது போலே அரிக்கும் கவலைத் தொகுதியும் அதனால் ஏற்படும் நோய்த் திரளும் குருவிக்கு இருப்பதாகத் தெரியவில்லை . - இந்த வரிகளில் பாரதி கிட்டத்தட்ட ஷெல்லியின் அபிப் பிராயத்தை அப்படியே எதிரொலிக்கிறான் என்பதை நாம் காண்கிறோம். இதன் பின்னர் ஷெல்லி மேல் காற்றை நோக்கி, என்னையும் தூக்கிச் சென்று பறக்க வைக்கமாட்டாயா என்று கேட்டதுபோல், பாரதி தெய்வத்தை நோக்கிக் கேட்கிறான்; ஷெல்லியோ தன்னிச்சையற்ற உதிர்த்த சருகாகிப் பறக்க விரும்புவதாகக் கூறினான்; பாரதியோ தானே தன்னிச்சை யோடு பறக்க வேண்டும் என்று விரும்புகிறான். எனவே அவன் மேலும் பின்வருமாறு எழுதுகிறான்: + : தெய்வமே! எனக்கு இரண்டு சிறகுகள் கொடுக்க மாட்டாயா? பாழ்பட்ட மனிதர் கூட்டத்தையும், அதன் கட்டுக்களையும், நோய்களையும், துன்பங்களையும், பொய் களையும் உதறி எறிந்துவிட்டு, நான் இச்சைப்படி வானத்திலே பறந்து செல்ல மாட்டேனா? ஆஹா! எத்தனை தேசங்கள் பார்க்கலாம்! எத்தனை நாடுகள்! எத்தனை பூக்கள்! எத்தனை மலைகள்! எத்தனை சுனைகள்! எத்தனை அருவிகள்! எத்தனை நதி கள்! எத்தனை கடல் வெளிகள்! வெயில், மழை, காற்று, பனி இவையெல்லாம் என் உடம்புக்கு நன்றாய் வழக்கப்பட்டு, இவற்றால் நோய்கள் உண்டாகாமல், எப்போதும் இன்ப உணர்ச்சிகளே உண்டாகும். இந்த நிலை எனக்கு அருள் புரியலாகாதா? குருவிக்குப் பேசத் தெரியும்; பொய், சொல்லத் தெரியாது. குருவியில் ஆண் பெண் உண்டு; தீராத கொடுமைகள் இல்லை , குருவிக்கு வீடுண்டு; தீர்வை - 280.