பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையையும் முடிக்கிறான். கவிதையின் தரத்தில் பாரதி யின் ' ஒட்டுக் குருவிக் கவிதை சிறந்தது தான்; ஆனால், ஷெல்லியின் ‘ வானம்பாடி'யோ அதைக் காட்டிலும் பன்" மடங்கு சிறந்ததா என்றே சொல்ல வேண்டும். கருத்தைப் , பொறுத்த வரையிலும் பாரதி ஷெல்லியைக் காட்டிலும் ஒரு படி மேலே சென்று, தன்னம்பிக்கை தளராத, மனிதத் துவத்தன்மை குறையாத கருத்தை வெளியிடுகிறான். 'மேல் காற்று என்ற கவிதைக் கருத்தையும், பாரதி விஞ்சிய விதத்தை நாம் முன்னர் கண்டோம். என்ன இருந்தாலும் பாரதி ஷெல்லிக்குப் பின்னர் வந்தவன்; ஷெல்லிக்குப் பின் னர் நூறாண்டுக்கால வளர்ச்சியைக் கண்டவன்; ஷெல்லியை அறிந்து அவனிடம் ஈடுபாடு கொண்ட பாரதி, அவனது பரம்பரையை மேலும் சிறந்த முறையில் வளர்த் துச் செல்ல முனைந்தவன். எனவே இந்தப் பாடல்களின் கருத்தில் ஷெல்லியைக் காட்டிலும் பாரதி மேலும் தெளிவும் உறுதியும் தன்னம்பிக்கையும் கொண்டிருப்பது வியப்புக்குமீய தல்ல. தம்மில் தம் மக்கள் அறிவுடைமை" என்ற குறள் வாக்கின்ப்டி , பாரதி ஷெல்லியைக் காட்டி இலும் அறிவுடைய வனாகத்தானே இருக்க வேண்டும்! இருக்க முடியும். இல்லை :Jா? ஒளியும் இருளும் ஷெல்லி 1818-ம் ஆண்டில், 'நேப்பிள்ஸ் அருகே, விரக்தி நிலையில் எழுதிய பாடல்கள்” (Stanzas written in Dejection, Pnear Naples) என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஒரு கவிதையை எழுதினான், அவனது வாழ்விலும் மனோ நிலை யிலும் புகுந்திருந்த துயரத்தையும் விரக்தியையும், நாம். மீண்டும் இங்கு நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை, அந்தக் காலத்தில் அவன் விரக்தி பாய்ந்த மனோநிலையின் காரண 4மாக , பெரும்பாலும் தனிமையை நாடி, அதில் தன்னையும் 232