பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோதியன்ற தோர் ஒற்றிருள் சேரக் குமைந்து சேரும் கொடுமையிது என்னே! (பாட்டு 2) காமமுற்று நிலத்தொடு நீரும் காற்றும் நன்கு தழுவி நகைத்தே தாலேயங்கி நல்லின்புறும் சோதி தரண முற்றும் ததும்பி யிருப்பு தீமை கொண்ட புலையிருள் சேர்ந்தோர் சிறி 24 நெஞ்சம் தி 4.3ங்குவ: தென்னே ! (பாட்டு 3) நீர்ச்சுனைக் களம் மின்னுற்றிலக . நெடிய குன்றம் நகைத்தெழில் கொள்ள வேர்ச்சுடர்பர மாண் பொருள் கேட்கும் மெலிவு ஓர் நெஞ்சிடை மேவுதல் என்னே? (பாட்டு 4) ஷெல்லி பாரதி ஆகிய இரு கவிஞர்களும் புறவுலகில் ஒளி திகழும் அதே நேரத்தில், தமது அகவுலகில் இருள் சூழ்ந்து . குமைந்து கொடுமைப்படுத்துவதைத்தான் இங்குக் குறிப் பிடப்பட்ட தத்தம் பாடல்களில் பாடியுள்ளார்கள், செல்லி யின் மனத்தில் புகுந்திருந்த இருளின் தன்மையை நாம் அவனது கவிதையின் மூலம் தெளிவாகப் புரிந்து கொள் கிருேம். ஆனால் பாரதியின் மனத்தில் எத்தகைய இருள் புகுந்திருந்தது என்பது நமக்குப் புரியவில்லை, அது நமக்குப் புரியாத இருளாகவே போய்விட்டது!