பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாதும் பொய்மையும் என்ற விலங்கினம் வாழும் வெங்குகைக்கு என்னை வழங்கினான் என்று நெஞ்சக் குமுறலோடு கூறுகிறான். மேலும், ஷெல்லி தனது ஆசிரியர்களைக் கொடுங்கோலர்கள்' என்று வருணித்தது போலவே, தனக்கு ஆங்கிலக் கல்வி என்ற பெயரால் கற்றுக்கொடுத்த ஐயரை யும் துரையையும் பாரதி “பொய்யர்!' என்று அழுத்தமாகக் கூறுகிறான். அதனால் தான் எள்ளளவு நன்மையும் பெறவில்லையென்றும், பாரத தேவியின் அருளாலும், நல்வினைப் பயனாலும்தான் அந்தப்

  • 'பேரிருளி* *லிருந்து தான் பிழைத்ததாகவும் அவன்

கூறுகிறான் (சுயசரிதம்: பாடல் 22 முதல் 41 வரை). திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் ஐந்தாம் பாரம் வரையில் படித்த பாரதியின் படிப்பு தந்தையின் மரணத் தால் தடைப்பட்டது; பின்னர் அவன் காசிக்குச் சென்ற காலத்தில் அங்கு சர்வ கலாசாலைப் பிரவேசப் படிப்புப் படித்து அதில் தேர்ச்சி பெற்றான், அத்துடன் அவனது பள்ளி வாழ்க்கை முடிவு கண்டது. ஒட்டனில் படிக்கும் போதே புரட்சிகரமான கருத்துக்களைக் கற்கத் தொடங்கி விட்ட ஷெல்லி 1820-ம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு. சர்வ கலாசாலைக்குப் படிக்கச் சென்றான். ஆக்ஸ்போர்டுக்குச் சென்ற காலத்திலேயே அவன் தனது கவிதைகளையும் வேறு சில நூல்களையும் எழுதி வெளியிடத் தொடங்கிவிட்டான். மேலும் அந்தப் பதினேழாவது வயதில், அவன் ' நாஸ்தி கத்தின் அவசியம்' (The Necessity of Atheism) என்ற ஒரு நூலை எழுதி, அதனை ஜெரிமியா ஸ்டக்லி என்ற புனை பெயரில் வெளியிட்டு, பாதிரிமார்கள், சர்வகலாசாலையின் அத்தியட்சகர், கல்லூரி ஆசிரியர்கள் முதலிய யாவருக்கும் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தான். பிரபுத்துவ வர்க்க மும், பாதிரியார்களும் தர்பார் நடத்திவந்த அந்தக் காலத்தில் நாஸ்திகம் பேசுவது மிகவும் துணிச்சலான காரியம். ஏனெனில் நாஸ்திகனைப் பாவி என்றும், பிரஷ்டன் என்றும் ஒதுக்கி வைக்கக்கூடிய காலம் அது. ஆனால் அந்த இளங் கன்று எதற்கும் அஞ்சவில்லை. புத்தகம் வெளிவந்த