பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க சிந்தடிக் சளிருந்து , அவள் செய்த கொலை தவறானதல்ல என்ற முடிவுக்கே நாம் வருவோம். பெண்ணுக்கு மானபங்கம் இழைக்கப்பட்ட கொடுமையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இந்தக் கதை 'பாஞ்சாலி சபதத்தோடு ஒப்பிடத்தக்கதாகும். எனவே இந்த நாடகம் பாரதியைப் பெரிதும் கவர்ந்திருக்க வாய்ப்புண்டு. இந்த நாடகத்தில் ஒரு காட்சி, தனது சகோதரர்கள் இறந்து பட்ட செய்தி வந்த நேரத்திலும், தன் தந்தை சிறிதும் கவலையில்லாமல், மாறாகச் சந்தோ ஷம் மிக்கவனாக, விருந்தாடிக் களிப்பதைக் காண பீட்ரை'ஸ்க்குப் பொறுக்கவில்லை, எனவே விருந்து மண்டபத்துக்கு வந்த பீட்ரை ஸ். அங்கு கூடியிருந்த பிரமுகர்களை நோக்கி, அந்த அநியாயத்தை நிறுத்துமாறு பலவாறு முறையிடுகிறாள். அவர்கள் செவியில் அவளது - வார்த்தைகள் ஏறவில்லை. பீட்ரைஸ் பின்வருமாறு பேசுகிறாள்: “உங்களில் எவருமே, என்னை ஏறிட்டுப் பார்க்கத் துணிய மாட்டீர்களா? ஒருவரும் பதிலளிக்கமாட்டீர்களா? ஒரே ஒரு கொடுங்கோலன் Sற்பல சிறந்த அறிவுமிக்க மனிதர் களின் புத்தியையும் அடக்கியாண்டுவிட முடியுமா? அல்லது நானும் ஏதாவதொரு கண்டிப்பான சட்டத்தின் மூலமாக முறையிட்டுக் கொள்ளாததால் தான், எனது வழக்கையும் நீங்கள் நிராகரிக்கிறீர்களா? ஆ! கடவுளே! நானும் என் சகோதரர்களோடு புதைந்து போயிருந்தால் இப்போது கழிந்து சென்ற வசந்தத்தின் மலர்கள் என் சமாதி மீதும் வாடிப்போயிருந்தால்! அத்துடன் என் தந்தை எங்கள் எல்லோருக்குமாகச் சேர்த்து ஒரே விருந்தாகக் கொண்டாடி கயிருந்தால்! (அப்படி நேர்ந்திருக்கக்கூடாதா?) (அங்கம் ! காட்சி 3, வரிகள் 133-149): Dare no one look on me? None araswer? Can one tyrant overbear The sense of many best and wisest men? Or it is that 1 Sue not in some form of scrupulous law, that ye deity my suit? 0 God! That I were buried with my brothers!