பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில நாட்களிலேயே அந்நூல் கல்லூரி அதிபர்களின் கவனத்துக்கு வந்தது. கல்லூரி அதிபர்கள் ஷெல்லியை அழைத்து விசாரித்தார்கள். இதனைப் பற்றி நமக்கு ஒரு விவரம்--'கவிதா சஞ்சிகை' (Poetical Magazine) என்ற பத்திரிகையின் ஆசிரியர் எழுதிய குறிப்பு-காணக் கிடைக் கின்றது. அது வருமாறு: கல்லூரி அதிபர்கள் ஷெல்லியை அழைத்து, இந்த' நூலுக்கு நீ ஆசிரியனல்ல என்று மறுத்துவிடு. நடந்தவற்றை நடக்காதவையாக நாங்கள் "கருதிவிடுவோம், என்று சொல்லிப் பார்த்தார்கள் . ஆனால் ஷெல்லியோ, ""ஐயா, உங்கள் மதம் உங்களுக்கு என்ன கற்றுக்கொடுப்பதாக நீங்கள் கருதுகிறீர்களோ, அது எனக்குத் தெரியாது. ஆனால் பொய் சொல்வதென்பது அந்தக் கணமே ஒரு கீழ்த்தரமான், கோழைத்தனமான பாவகாரியமாகும் என்றே எனது கொள்கைகள் எனக்குக் கற்றுக்கொடுக்கின்றன. இந்த நூலை நான் தான் எழுதினேன். நான் பெருமைப்படவேண்டாத அளவுக்கு இதில் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் இந்நூலைப் புறக்கணிக்குமாறு இந்த உலகத்தில் எந்தவொரு சக்தி யும் என்னை வற்புறுத்த இயலாது என்று பதிலளித்து விட்டான்(On Shelley-Oxford University Publication). இந்தச் சம்பவத்தின் விளைவாக, ஷெல்லி ஆக்ஸ்போர்டிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டான். சர்வகலாசாலையில் சேர்ந்து ஓராண்டுகூடப் பூர்த்தியாகாத நிலையில் அவனது கல்லூரிப் படிப்பும் அன்றுடன் முடிவு கண்டது. கல்லூரியில் படித்த காலத்தில் தன்னை நாஸ்திகனென்று பிரகடனப் படுத்திக் கொண்ட ' ெஷ ல் லி, தனது இறுதிக்காலம் வரையிலும் மதவிரோ தியாகத்தான் இருந்தான். ஆனால் பாரதியின் படைப்புக்களில் நாம் நாஸ்திக வாதத்தைக் காணவில்லை; அவன் தெய்வ நம்பிக்கை மிகுந்தவனாக', சகல மதங்களும் ஒன்று எனக்கருதும் சமரச வாதியாகத் தான் நமக்குக் காட்சியளிக்கிறான். " வாழ்க்கைப் போர் -- ஷெல்லி கல்லூரியிலிருந்து விலக்கப்பட்ட காலத்தில், ஷெல்லியின் பல கருத்துக்களில் உடன்பாடு கொண்டிருந்த,