பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயினிற் சபதமிட்டேன்-இனி மறக்கிலேன்; எனை மறக்ககிலீர்! {பாட்டு . 5} ஷெல்லியின் பாடல் பிரிந்துபோன கவிதா தேவியை மீண்டும் வருமாறு அழைப்பதாக உள்ளது; பாரதி பிரிந்து போன கலைமகளை மீண்டும் வரவேற்பதோடு மட்டுமல்லாமல், இனித் தன்னை விட்டு அவளும் பிரியக்கூடாது, தானும் அவளைப் பிரியப்போவதில்லை என்று சத்தியமும் செய்து விடுவதாக அவனது பாடல் உள்ளது . ஷெல்வியின் கருத்தை, பாரதி தன்னனுபவத்தோடு ஒட்டிச் சேர்த்து, அதனை மேலும் ஒரு படி உயர்த்திச் சென்றுள்ளான் என்பதை நாம் இங்குக் காண்கிறோம். ஷெல்லியின் 'ஹெல்லா ஸ்' - என்ற கவிதை நாட கத்தில் ஒரு கோஷ்டிகானக் கவிதை இடம் பெற்றுள்ளது. அந்தக் கவிதை பின்வருமாறு தொடங்குகின்றது: ஆற்றின் மீது பளிச்சிட்டு, வெடித்து, மிதந்தோடிச் செல்லும் குமிழி களைப் போன்று, படைப்பிலிருந்து அழிவு வரையிலும் உல கங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக உருண்டோடிச் செல்கின்றன. ஆனால் அவை அப்போதும் அழியாத் தன்மை கொண் டவை "...." (வரிகள் 197-202): (Worlds on worlds are rolling over From creation to decay, Like the bubbles on a river Sparkiing, bursting, borne away. But they are still immortal...) பிரபஞ்ச கதியைப் பற்றிய ஷெல்லியின் இதே கருத்தை, பாரதி தனது 'கோமதி மகிமை' என்ற கவிதையில் பின்வரு மா? அழகாகப் பாடி விடுகிறான் : * யெNேU 1 - தருகின்ற வானமொர் கடல்போலாம்;- அக்கடல்" அதனுக்கே-எங்கும்