பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருவகங்களும் உவமைகளும் ஷெல்லியின் கவிதைகளில், சில குணங்களையும் தன்மைகளையும் புலப்படுத்துவதற்குக் குறிப்பிட்ட சில பொருள்களை உருவசமான குறியீடுகளாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு போக்கு தென்படுவதை, ஷெல்லியை நன்கு கற்றவர்கள் எளிதில் உணர்வர். இத்தகை23 , உருவக பலான குறியீடுகளை ஷெல்லி எவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறான் என்பதைக் குறித்தே, ஆர்டோல்டு ஸ்ட்ராங் என்ற விமர்சகர் தமது நூலில் {Three Studies in Shelley-Archibald: T. Strong) ஆராய்ந்து எழுதியுள்ளார், மேலும், ஷெல்லியின் படைப் புக்களில் குறிப்பிட்ட கருத்துக்களும், அவற்றைப் புலப் படுத்தும் உருவகக் குறியீடுகளும், சொல்லப் போனால் குறிப் பிட்டிய வார்த்தைகளும், பதச்சேர்க்கைகளும் திரும்பத் திரும்பப் பல இடங்களில் வருகின்றன , இவ்வாறு வருவதால், ஷெல்லிக்குப் புது மாதிரியான கற்பனைகள் அதிகமாகத் தோன்றாத அளவுக்குக் கற்பனை வறட்சி இருந்த தெ என்று முடிவு கட்டிவிடக் கூடாதென்றும், ஷெல் வியிடம் செழுமையும் புதுமையும் நிறைந்த கற்பனை வளத்துக்குக் குறைவில்லையென் றும். எனினும் அந்தக் கு யீடுகளின் மூலம் தான் கூறவந்த விஷயத்தை அழுத்தமாகக் கூறுவதற்கே ஷெல்லி - அவற்றைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தியுள்ளான் என்றும் விமர்சகர் ஸ்ட்ராங் அபிப்பிராயப்படுகிறார். பொதுவாக, ஷெல்லியின் படைப்புக்களில் தீய அம்சங்களைக் குறிக்கும் குறியீட்டு உருவகங்களாக, பாம்பு, தேள், விஷம் முதலிய பொருள்கள்