பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெருக்கிப் பிழிவதற்காக கவலை அதன் மீது சுற்றிக்கட்டி யிருந்த நாகபாசத்தை, அது (சங்கீதம்) கட்டவிழ்த்து விடு கிறது” (பாட்டு 2 வரிகள் 9, 20) என்று கூறுகிறான். (It loOSens the serpent which care has beend Upo11 my heart to stite it) . இங்கோ கவலையின் கட்டுத்தளையையே அவன் பாம்பாகக் காண்கிறான். அவனது சுதந்திர பனுவலிலோ (0de 70 perty) மன்னராட்சியை ஒழித்துக்கட்ட வேண்டுமென்ற கருத்தை வெளியிடும்போது, வெற்றியொளி துலங்கும் வீரவாள் உயர்த்தி, (மன்னன் என்ற இந்த படுமோசமான மிகக் சிக்க லான வார்த்தையின் சர்ப்பத்தளைகளை வெட்டித்தள்ளுங்கள்! என்று முழக்கமிடுகிறான் {பாட்டு 15. வரிகள் 217- 2 1 3}: (Lift the victory-dashing - Sword And cut the Snaky knots of this foul gordiani word). - இந்தப் பாடலிவோ மன்னராட்சியை மனிதவர்க்கத் தையே தலையீட்டுக் கட்டி அடிமைப்படுத்தியபாம்புக் கூட்டம் என்றே அவன் கருதுகிறான். இவ்வாறு பாம்பைத் தீமையைப் பிரதிபலிக்கும் உருவகமாக ஷெல்லி கையாள்வதைப் பல இடங்களில் நாம் காணமுடியும். - ஷெல்லியைப் போலவே குணங்கள் - தன் மகள் ஆகிய வற்றைப் பிண்டப் பிரமாணமான உருவங்களாகக் கற்பிக்கும் தன்மையை நாம் பராதியிடம் பல இடங்களில் காணலாம், ஆனால் இத்தகைய தன்மையைப் பாரதி ஷெல்லியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இந்திய வேதங்கள், புராண இதிகாசங்கள் முதலியனவெல்லாம் இத்தகைய உருவங்களைக் கையாண்டுள்ளன என்று நமக்குத் தெரியும், அந்த மரபையே பாரதி பின்பற்றினால் எசனலாம், மேலும், இயற்கையின் பூத சக்திகளைத் தேவ தேவியராகவும், தெய்வங்களை ஆண் பெண்ணான மானிட வடிவங்களாகவும் காமக் குரோதாதியான குணங்களைப் பைசாசங்களாகவும் , அசுரர்களாகவும் சித்திரிப்பது இந்திய மரபுதான். எனினும்