பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி இத்தகைய உருவகங்களைப் பல இடங்களில் மிகவும் திறமையாகப் பயன்படுத்துகிறான். உதாரணமாக, தனது 'பக்தி' என்ற கவிதையில் அவன் பின்வருமாறு பாடுகிறான்: காமப் பிசாசைக் குதிக் கல்கொண் டடித்து விழுத்திடலாகும்; இத் தாசப் பேதைக்கண்டு தாக்கி மடித்தட லrrகும்; எந்நேரமும் தீமையை எண்ணி - அஞ்சும் தேம்பற் பிசாசைத் திருகி'>மறிந்து, பொட்டு நாம மில்லாத-உண்மை தாமத்தி னாலிங்கு நன்மை விளைந்திடும். {பாட்டு 2) இந்தப் பாடலில் காமம், தாமசம், தேம்பல் ஆகிய வற்றையெல்லாம் பிண்டப் பிரமாணமான பிசாசுகளாக உருவகித்து, அவற்றைக் குதியங்காலால் அடித்து வீழ்த்தும் vரதியை . நாம் காண்கிறோம். மேலும் செல்லியிடம் காண்பது போலவே, இத்தகைய உருவகமான குறியீடுகள் ஒரு புறமிருக்க, குறிப்பிட்ட வார்த்தைகளும், சொற் சேர்க்கை களும் பாரதியிடமும் காணப்படுகின்றன. இவை அபரிமித மாகக் காணப்படாவிட்டாலும், கணிசமான அளவுக்குக் காணக் கிடைக்கின்றன" . இவற்றில் நான் பார்த்தவரையிலும் 4 - மனளி" என்ற சொல் பல்வேறு விதமான" பதச் சேர்க்கைகளிற் கலந்து' க வும் அபரிமிதமாகத் தென்படுகின்றது. அழகையும் உக்காவையும் குறிக்கும் பல பொருள்களைக் குறிக்கும்போது, பாரதி இந்த 'மணி' என்ற வார்த்தையைப் பெரிதும் பயன் படுத்துகிறான். இந்த வார்த்தையின்மீது பாரதிக்கு ஒரு பெருத்த மோகமும் ஈடுபாடும் இருந்தது என்று சொல்லு மளவுக்கு, அது பயன்படுத்தப்பட்டுள்ளது என்றே கூறலாம், இதனைப் பின்வரும் உதாரணங்கள் மூலம் காணலாம்: மணிமொழி, பணி நகை (பாரதமாதா நவரத்ன மாலை); பச்சே toணிக்கிளி (பாரதமாதா திருத்தசாங்கம்); தாயின் மணிக்கொடி; மலர்மணிப் பூத்திகழ் மரன் {ஜாதிய கீதம்-1); நளிர்மணி நீர் (ஜாதிய கீதம்-2); மணித்திருநாடு {வாழிய