பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்); தேவர் மணியுலகு (சத்ரபதி சிவாஜி); குருமணி - (குரு கோவிந்தர்); ஐந்து மணியாறு (லாஜபதியின் பிரலாபம்}: பாதமணி மலர் (விநாயகர் நான்மணி மாலை; மணிப் பெருந்தெப்பம் (வள்ளிப் பாட்டு-1}; மணிக்குளம் உள்ள சோலை, மணிச் செல்வம் (திருமகள் துதி); மலர் வளர் மணி, சுடர் மணிமாடம் (திருமகளைச் சரண் புகுதல்); செந்தமிழ் மணிநாடு (வெள்ளைத் தாமரை); மணிவாக் குதவிடுவாள் (நவராத்திரிப் பாட்டு): பூ மணித்தாள் ஆறு துணை); மணித் தேரின் முன் பாகன் (ஆரிய தரிசனம்); சீதமணி நெடு. வானக்குளம் (வெண்ணிலாவே!); சுடர் மணி வாள் (கற்பனையூர்); அன்ன மூட்டிய தெய்வ மணிக்கை {பெண்கள் வாழ்க); தாரகையென்ற மணித்திரள் (நிலாவும் வான்மீனும் காற்றும்); மணிச் சிறு மீன் (தூமகேது); மணிப் பெயர்க்காதலி, மணிச் சொற்கள் (கவிதைக் காதலி); மணி நித்திலப் புன்னகை, தேனகத்த மணி மொழியாள் (சுய . சரிதை); மணித்தாமரை நேர்முகத்தாள், சோதிமணி முகத்தினள் (பாரதி அறுபத்தாறு); மணி நகர், பொன்னழங்க மணிமடவார், குன்றா மணித்தோள் (பாஞ்சாலி சபதம்); வானரர் தம்முள்ளே மணிபோல் உமையடைந்தேன் (குயில் பாட்டு ).... . பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே செல்லும்," இதைப்போலவே, கனல், ஒளி போன்ற வார்த்தைகளையும் பாரதி பல இடங்களில் பயன்படுத்துகிறான். எனினும் * மணி' என்ற வார்த்தையைப் பதச்சேர்க்கையோடு பயன் படுத்தி யுள்ள அளவுக்கு அவன் வேறு எந்த வார்த்தையையும் பயன்படுத்தவில்லை என்றே தெரிகிறது. இவ்வாறு குறிப் பிட்ட சில. - வார்த்தைகளை அவன் அடிக்கடி பயன்படுத்து வதால் நாம் அவனைக் கற்பனை வறட்சிக்கு ஆளானவன் என்று குறை கூறிவிட முடியாது. தமிழ் இலக்கிய உலகம் காணாத புதுமையான கற்பனைகளையும், புதிய அழகும் பொருளும் தரும் பதச் சேர்க்கைகளையும் பெரிதும் உருவாக்கித் தந்த பெருமை கம்பனுக்குப் பின்னர் பாரதிக் குத்தான் உண்டு என்று கூடச் சொல்லலாம். உதாரண 259