பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாக, பெண்களின் விழிகளைப் பற்றிப் பல்வே ஊy உவமை களையும் தமிழ்ப் புலவர்கள் உண்டு தொட்டுக் கையாண்டு தான் வந்திருக்கிறார்கள்; அவர்கள் எந்தவோர் உவமையையும் விட்டு வைக்கவில்லை என்றே சொல்லலாம். ஆனால் அதே பழைய உ.வமைகளைப் பாரதி கையாளும்போது, அவனது பதச் சேர்க்கையால் அவற்தில் ஒரு புதுமையும் சுகமும் தென்டாடத்தான் செய்கின்றன. சில உதாரணங்கள் : கனல் கால் இணைவிழி (பாரத மாதா நவரத்தினமாலை); நிலவு ஊறித் ததும்பும் விழி கண்ணம்மாவின் காதல்); நினை:வழிக் கும் விழி (திரு வேட்சை ); வேற் கரு விழி (திருமகளைச் சரண் புகுதல்}: விழிக்கோணம் (சரஸ்வதி காதல்); மையுறு வாள் விழி (சங்கு); மையிலகு விழியாள், 'மான் மானும் விழி (கண்ணன்-எனது சற்குரு); கொத்துக் கனல்விழி (கண்ணன் - என் காதலன்-11) சுட்டும் விழிச்சுட்டர், வட்டக்கரிய விழி யாள் (பாரதி அறுபத்தாறு); மோதி விழிக்கும் விழியினார் {கண்ணர். மா- என் காதலி 1 6); வாஸ் வைக்கும் நல்விழி, அம்: பினொத்த விழியாள், கள்ளக் கரிய விழியினாள் (பாஞ் சாலி சபதம்): மீள விழியில் மிதந்த கவிதை {கு பில்ட்{ாட்டு). ' இவ்வாறு பாரதி பழகிப்போன உவமைகளையும் வார்த் - தைகளையும் கூட, அவற்றைச் சேர்க்கின்ற முறையினால், புதுமையழகு பெறச் செய்து விடுகிறான். இவை தவிர அவனே புதிய கற்பனைகளையும், தமிழுக்கே புதியதான உ.ணர்ச்சி வெளியீடுகளின் வடிவங்களையும் உருவாக்கி அவற்றைத் தனது ' கவிதைகளின் மூலம் வெளியிட்டு விடுகிறான். ஷெல்லி சில குறிப்பிட்ட பொருள்களை 2.ருங்கக் குறியீடுகளாக்கி, அவற்றைப் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளான் என்பதைக் கு இப்பிட்டு, அதற்கோர் உதாரணமாக, 'பாம்பு' என்ற ' உருவகத்தை அவன் எவ்வாறு பிரயோர கித்துள்ளான் என்று பார்த்தோம். பாரதி யிடமும் இத்தகைய உருவகங்கள் பலவுண்டு. சொல்லப் போனால், ஷெல்லியைப் போலவே பாரதியும் பாம்பை ஓர். உருவகப் பொருளாகப் (பவ இடத்தில் பயன்படுத்தி யுள்ளான் எனலாம், பாம்பைத் தீமையின் வடிவமாகக் - 260 -