பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய உலகத்தின் வடிவங்களை உணர்ந்தறியா விட்டாலும் இவற்ளற மாபெரும் பொம்மைப் பொருள்களாகக் கண்டு மகிழும் நிர்மலமான குழந்தைப் பருவத்தின் அந்த ஆனந்தம் தான் என்ன ? (Arag/nents Connexected with Eppsychi?-- வரிகள் 154-157}: துக்களுக்கு சுன்ணனைத் தாது, சாதி, அந்தத் (What is that joy which seresie infancy Perceives not...yet enjoye The shapes of this new world, in giant toys....) குழந்தைப் பருவத்தில் உலகப் பொருள்களையெல்லாம் பெரும் பெரும் பொம்மைகளாகக் காணும் ஆனந்தம் குறித்த ஷெல்லி எழுதிய! இந்த வரிகள் பாரதி எழுதிய, " என்றான் --என் தாய்' என்ற பாட்டில் இடம் பெற்றுள்ள ஷ்ே க்ருத் துக்களுக்கு அடியெடுத்துக் கொடுத்தன என்று வாதிக்க இடமுண்டு. கண்ணனைத் தாயாகக் கொண்டு, தன்னைக் குழந் தைராக மாற்றிக் கொள்ளும் உ.பாரதி, அந்தத் தாய் தனக்கு விதம்விதமான பொம்மைகளை வழங்கியதாக, அதாவது இந்தப் பிரபஞ்சப் பொருள்களையே பொம்மைகளாக வழங்கியதாகப் பாடுகிறான்: விந்தை விந்தையா க' எனக்கே -- பல

  • 'விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப்பாள்;

- சந்திரன் என்றொரு பொம்மை-அதில் தண்ணமுதம் போல ஒளி: பரந்தொழுகும்; மந்தை மந்தையா மேகம்--பல வன்னமுறும் பொம்மையது மழை பொழியும்; முந்த ஒரு சூரியனுண்டு-அதன் முகத்தொளி கூறுதற்கொர் மொழியிலையே! இவ்வாறு சந்திரனையும், மேகத்தையும், சூரியனையும் கண்ணன் எனும் தாய் தனக்கு வழங்கிய பொம்மைகளாகக் காணும் பாரதி, தொடர்ந்து 4, 5, 6 எண்ணுள்ள பாடல் களில் வானத்து மீன்கள், கானத்து மலைகள், நல்ல நல்ல நதிகள், விரிகடல் சோலைகள், காவினங்கள், மணிமலர்கள், 2 63