பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதவித்தொகை கிடைக்க வழி பிறந்தது. எனினும் அவன் அந்தப் , பணத்தினால் பெருவாழ்வு வாழ்ந்துவிடவில்லை . தனது தேவைகளையும் வசதிகளையும் குறைத்துக்கொண்டு தான் அவனால் வாழ முடிந்தது. ஆக்ஸ்போர்டிலிருந்து விலக்கப்பட்ட பின்னர், ஷெல்லி லண்டனில் வந்து தங்கியிருந்தான். அப்போது அவனது சகோதரியின் பள்ளித் தோழியான ஹாரியெட் வெஸ்ட்புரூக் (Harriet Westbrook) என்ற இளங் குமரியோடு அவனுக்குப் பரிச யம் ஏற்பட்டது. இந்தப் பரிசயத்தால் ஹாரியெட் ஷெல்லியைக் காதலிப்பதாக அவனிடம் தெரிவித்தாள் . சின்னாட்களில் தான் வீட்டில் மிகுந்த கொடுமைக்கு ஆளாகி யிருப்பதாகவும், எனவே தன்னை மணந்து காப்பாற்றும்படி யும், ஷெல்லியோடு எந்தவிதத் தியாக வாழ்க்கையையும் வாழத் தானும் தயாராயிருப்பதாகவும் அவள் ஷெல்லியிடம் வேண்டிக் கொண்டாள் . எந்தவொரு ஜீவனின் துன்பத்தை யும் காணச் சகிக்காத, ஷெல்லி தனது ஆதரவை நாடிய அந்தக் குமரியை உதறித் தள்ளிவிடவில்லை. எனவே பதினெட்டு வயதான ஷெல்லி பதினாறு வயதான ஹாரியெட் டைக் கடத்திக் கூட்டிக் கொண்டு போய்விட்டான். ஷெல்லி "யின் இந்தச் செய்கையை, பாரதி தனது குயில் பாட்டில் சொல்வதுபோல் காதலினால் இல்லை, கருணையால்' • செய்துவிட்ட காரியம் என்றே சொல்ல வேண்டும், பின்னர் ஷெல்லி அவளை முறைப்படி மணந்து கொள்ளவும் செய் தான். ஆனால் அந்த மண வாழ்க்கை அதிக காலம் சிறக்க வில்லை. ஆரம்பத்தில் வறுமையின் மத்தியிலும் மகிழ்ச்சியாக இருந்த அந்தத் தம்பதிகளிடையே இரண்டு மூன்று ஆண்டுக் காலத்திலேயே மன வேற்றுமைகள் தோன்றின, இந்தத் திருமண வாழ்வில் குழந்தைச் செல்வத்தைப் பெற்றும், அவர்களது வாழ்க்கை மனம் ஒன்றிச் செல்லவில்லை.. இந்தச் சந்தர்ப்பத்தில் தான் ஷெல்லி தான் வெகுகால மாக ஏகலைவ பக்தி செலுத்திவந்த வில்லியம் காட்வின் (William Godwin) என்பவரை நேரில் சந்தித்து அவரது நட்பைப் பெறும் வாய்ப்பைப் பெற்ருன், வில்லியம் காட்வின். - பா, ஷெட்