பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{...,... 2nd 13ve the set to bind The disunited tendrils of that win: Which bears the wine of life, the Hatriarn heart), இங்கு அவன் ஒயின் மதுவை மனித இதயத்துக்கே, அதன் இன்பத்துக்கே ஒப்பிடுகிறான். இவ்வாறு மதுவை இன்பத்தின் குறியீடாக ஷெல்லி பல இடங்களிலும் உவமிக் "கிறான். இவ்வாறு , உவமிப்பது மேலை நாட்டுக் கவிஞர் களுக்கு மட்டும் உரியதல்ல. 'பாரசீக நாட்டுப் பெருங் கவிஞனான உ.மார் காய்யூமும் , மற்றும் ஷா தி, ரூமி டே!!சன்ற பாரசீகத்து சூபிக் கவிஞர்களும் (Sufi Poets) வாழ்க்கை யின்பத்தை மதுவுக்கு ஒப்பிடுவதையும், நமது நாட்டிலும் மதுவை! இன்பத்தின் குறியீடாகப் புலவர்கள் பலர் உவமித்துள்ளார்கள் என்பதையும் நாம் காணலாம்.

  • மது' என்ற தலைப்பில் பாரதி எழுதியுள்ள கவிதையில்,
    • மது நமக்கு, 28து நமக்கு மது நமக்கு விண்ணெலாம் . , .**

{பாட்டு 22 என்று தொடங்கி, அவன் உலக இன்பத்தையே மதுவாக உலமிப்பதை நாமறிவோம். 'மது' என்ற அந்தப் பாடலே யோகி, போகி, ஞானி ஆகிய மூவருக்கும் நிகழும் சம்வாதமாக அமைந்து, இறுதியில் பாரசீகத்து சூபிக் கவிஞர்களின் 'மெய்ப் பொருள் உறவு'த் {Mysticism) தத்துவத்தில் முடிமேடைகிறது எனலாம். அதாவது இந்தக் கவிஞர்கள் பலரையும் போலவே பாரதியும் மதுவை இன்பத்தின் குறியீடாக உவமித்துள்ளான் என்பதை மட்டும் நாம் இங்கு நினைவில் நிறுத்திக்கொள்வோம், மதுவை இன்பத்தின் குறியீடாகப் பல இடங்களில் உவமிக்கும் ஷெல்லிதான் எழுதிய “ தேவதைகளின் ஒயின் மது {Wine of the Fairies} என்ற துண்டுக் கவிதையில் பின் வருமாறு பாடுகிறான்: தேவதைகள் மணிமலர்க் கிண்ணங் களிலே ஏந்திப் பிடிக்கும், சந்திரப் பிரவாகத்தால் மலர்ந்த காட்டு ரோஜா மலரிலிருந்து வழியும் தேன்மதுவை'. அருந்தி நான் போதை கொண்டிருக்கிறேன். (வரிகள் 1-3}: '. (I am drunk with the honey wine: Of the 11007-unfolded eglantine Which fairies Catch it hyacinth bowls). 288