பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெள்ளு தமிழ்ப் புவவோர்கள் பல தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார், (தமிழ்த்தாய்-பாட்டு 3) என்று பாடுகிறான். இதன் மூலம் அவன் காவியத்தின் இனிமையைக் கள்ளையும் தீயையும் சேர்த்து உருவாக்கிய ஒன்றாகக் குறிப்பிடுகிறான், ஷெல்லி இனிமையின் சிகரத்தை இனிமையான பாரணமாகவும், ஸ்பரிச சுகத்தைச் சுட்டெ ரிக்கும் மின்சார வேகமாகவும், நெருப்பாகவும் குறிப்பிட்ட தைக் கண்டோம். இதே போன்று தார திரியும் பாடுகிறான்; கொன்றிடும் என இனிதாய்-இன்யம் கொடு நெருப்பாய், அனற்கஷை அம்முதாய் நன்றில் காதலுக்கே--இந்த நாசியர் தமை) கானைச் சூழவைத்தாள். (கண்ணன்-என் தாய், பாட்டு 7} இங்கு நல்ல காதல் இன்பத்தைப் பாரதி கொல்லுவது போன்ற இனிமை, இன்பமானதொரு நெருப்பு, அனலான சுவை அமுது என்றெல்லாம் கூறுகிறாள். ஷெல் இனள் 'எபிசைக்கிடியா'னில் நாம் கண்ட கருத்து இங்கு பாரதியிடம் அப்படியே பிரதிபலிப்பதை உணர்கிறோம். இன்னோர் இடத்திலோ வெண்ணிலாவின் ஒளியழகை வருணிக்கும்போது, கொல்லும் அமிழ்தை நிகர்த்திடும் கள்ளொன்று வெண்ணிலாவே!-வந்து கூடியிருக்குது நின்னொளி வேரடிங்கு வெண்ணிலாவே (வெண்ணிலாவே !--[பாட்டு !} என்று பாரதி பாடுகிறான். சாகாத தாேமையை அளிக்கும் சக்தி பெற்ற அமிழ்தத்தை, அதன் , தன்மைக்கு நேர் எதிரான எதிர்மறையின் மூலம் 'கொல்லும் அமிழ்து' என்று அவன் கூறுகிறான். இனிமையான மரணம், இங்கு மர ணமான இனிமை என்று மாறி நின்று ஒலிப்பது போல் 272