பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம் பிக்கையில் தான் நான் இந்தக் கவிதையை இயற்றியிருக் கிறேன்' .' ஆண் பெண் சமத்துவம், சுதந்திர வாழ்வு, சமதர்ம சமுதாயம் ஆகிய கனவுகளை (iவளிப்படுத்தும் அவனது இஸ்லாமின் புரட்சி' மனித குலத்தின் மீதும் , அதன் முன்னேற்றத்தின் மீதும், நம்பிக்கை இழக்காத ஷெல்லியின் மனோவுறுதியில்தான் உருவாயிற்று. பிரெஞ்சுப் புரட்சியிலிருந்து புதிய ஆதர்சம் பெற்ற ஷெல்லி, தனக்கும் புரிந்த வரையிலும், தனது தீர்க்க தரிசனத்துக்கு எட்டும் வரையிலும் நோக்கி, அதனை மேலும் வளர்த்துச் சென்றான். சமுதாய வாழ்க்கையில் சமத்துவம் நிலவவேண்டும் என்று வேட்கை கொண்ட ஷெல்வி, இன்று 'சோஷியலிஸம்' என்ற பெயரால் நாம் தெரிந்து கொண்டிருக்கின் ற சமதர்மம் அல்லது பொதுவுடைமைத் தத்துவத்தையோ, அதனடிப் படையில் அமையக் கூடிய சமுதாய அமைப்பின் தன்மை களையோ தெரிந்து கொண்டிருக்கவில்லை; தெரிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பும் - அவனுக்கில்லை. அவனது காலத்தில் இங்கிலாந்தில் ஸ்தாபன ரீதியாகத் திரண்டு உரிமைகளுக் காகப் போராடிய தொழிற்சங்கங்கள் இல்லை; பொது வுடைமை" இயக்கம் இல்லை; பொதுவுடைமைத் தத்துவ கர்த்தாக்களும் இல்லை. இன்றைய பொதுவுடைமைத் தத்து வத்தின் பிதாமகன் எனப் போற்றப்படும் காரல் மார்க்ஸ் ஷெல்லியின் மரணத்துக்கு இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பின்னர், 1848-ம் ஆண்டில்தான் * கம்யூனிஸ்ட் அறிக்கை* (Conarvurtist hanifeste) எனப்படும் தமது பொதுவுடைமைப் பிரகடனத்தை வெளியிட்டார். எனினும் கூட... பிரெஞ்சுப் புரட்சியின் முப்பெருங்கோஷங்களிலும், ஜன நாயக ஆட்சி யிலும் நம்பிக்கை கொண்டிருந்த ஷெல்லி, அவனது காலத் தில் தேர்ந்த , தெளிந்த, தீர்க்கதரிசன நோக்குடைய சிறந்த சமதர்மவாதியாகத்தான். திகழ்ந்தான். மன்னராட்சி, மத குருக்களின் ஆட்சி ஆகியவற்றுக்கெதிராகப் பாடிய ஷெல்லி, தொழிலாளி மக்களிடம்தான் அந்த ஆட்சிகளைக் கவிழ்க்கக் கூடிய சக்தி இருக்கிறது என்பதையும் உணர்ந்தான். மேலும், பல்வேறு சரித்திர நிகழ்ச்சிகளையும் தீர்க்கதரிசனத்தோடு 27.9